பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புல்லின் இதழ்கள்

i.

வினியோகித்துக் கொண்டும்; சில சமயங்களில் சினிமா வண்டியிலிருந்து, கூண்டுக்கு வெளியே ஆகாசத்தை நோக்கி கத்தை கத்தையாக வீசி எறியவும் செய்வார்கள்.

காற்றில் கலைந்து, பல வண்ணங்களில் சிதறிப் பறக்கும் நோட்டீசுகளை கிராமத்து விடலைப் பையன்களும்; சமயத்தில் பெரியவர்களும் கூட குஷியும் கும்மாளமுமாய், எம்பிக் குதித்து, பறக்கும் நோட்டீசைத் தாவிப் பிடிப் பார்கள்.

பாண்டு வாத்தியமும், சினிமா வண்டியின் பின்னே தொடர்ந்து செல்லும் சிறுவர்களின் கூச்சலும், சந்தோஷ. ஆரவாரமும் தெருவைக் கலக்கிக் கொண்டிருக்கும்.

குழந்தைகள் மட்டும்தான் இப்படி என்றில்லை : பாண்டுமுழக்கத்தோடு சினிமாவண்டி தங்கள் தெருவிற்குள் நுழைந்தால்- கிராமத்து மக்கள் அனைவரும் ஒருவித ஆவலுடன் தங்கள் தங்கள் வீட்டு வாசல் தூண்களைப் பிடித்துக் கொண்டு நின்று கவனிக்கத் தவற மாட்டார்கள்.

நோட்டீசை வாங்கி, வரி விடாமல் படித்து முடிக்கும் போது- ஆச்சர்யத்தால் அவர்களது விழிகள் அகன்று:

விரியும்.

சினிமா வண்டி பாகவதர் வீட்டை அடையும் போது வேறு யார் வராவிட்டாலும், சுசீலா தவறாமல் வாசலுக்கு ஒடி வந்து விடுவாள்.

ஹரி ஊரில் இருந்தால்- அவன்தான் ஒடிப் போய் நோட்டீஸ் வாங்கிக் கொண்டு கொடுத்தாக வேண்டும். அப்பாவோடு வெளியூர் போயிருந்தால், தெருப் பையன் களிடம் கெஞ்சிக் கேட்டோ- இல்லை நேரே வண்டிக்கே போயோ தவறாமல் சுசீலா நோட்டிசை வாங்கி கதைச் சுருக்கத்தைப் படித்து முடித்து விட்டுத்தான் மூச்சு விடுவாள். அதில் அவளுக்குப் பிடிக்காத விஷயம்- மீதியை