பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி சால ஸ்-கமா? 107

வெள்ளித் திரையில் காண்க- அல்லது கண்டு களியுங்கள்’, என்கிற வரிகள்தாம்.

அதையும் எழுதி விட்டால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்? முடிவு தெரிந்து விட்டால் சினிமாவிறகு வர மாட்டார்கள் என்கிற பயம் போலிருக்கிறது"- என்று எரிச்சலோடு முனு முணுத்தபடி உள்ளே போவாள்.

ஊரில் இருக்கும் போது, நல்ல படமென்றால்- அதுவும் மறுநாள் வெளியூரில் கச்சேரிகள் ஏதுமில்லாதிருந்தால்பாகவதர் குடும்பத்தோடு சினிமாவிற்குப் போவார்.

பாகவதர் குடும்பத்தினர் சினிமாப் பார்க்க வருகி றார்கள் என்றால் உள்ளுர்வாசியான டுரிங் டாக்கீஸ் மானேஜர் கிருஷ்ணாராவ், முன்னமேயே ரிசர்வ் செய்து டிக்கெட்டுக்களை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுவார். பாகவதரிடம் அளவற்ற அன்பும், மரியா ைதயும் கொண்டவர் அவர்.

கொட்டகையில் தரை, பெஞ்சு, நாற்காலி என்கிற மூன்று வகுப்புகளுக்கு மேல், குஷன் வைத்த நாற்காலி’ என்கிற ஸ்பெஷல் வகுப்பும் இருந்தது. பிரமுகர்களுக்கான விசேஷ வகுப்பு அது.

பாகவதர் குடும்பத்தில் யார் வந்தாலும், அந்த ஸ்பெஷல் வகுப்பில்தான் படம் பார்ப்பார்கள்.

முசிரி சுப்ரமணிய ஐயர் நடித்த பக்த துக்காராம் ‘'; மகாராஜபுரம் விசுவநாத ஐயரும், கே.பி. சுந்தராம்பாளும் நடித்த நந்தனார்’, திருவாவடுதுரை டி. என். ராஜ ரத்தினம் பிள்ளை நடித்த கவி காள மேகம்’, போன்ற படங்கள் வந்தால், ஹரியையும் அழைத்துக் கொண்டு இரண்டு மூன்று தடவைகள் கூட அந்தப் படங்களைப் பாகவதா பாாபபாா.