பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 புல்லின் இதழ்கள்

ஏனென்றால் அவைகள் எல்லாம் சிறந்த சங்கீதப் படங்களாக இருக்கும். இப்படிப்பட்ட பிரபல சங்கீத வித்வான்கள் மேடையில் செய்யும் கச்சேரிகளை எல்லாம் சமயம் கிடைத்தபோது எங்கு நடந்தாலும் போய்க் கேட்க வேண்டும்; அப்போதுதான் ஞானம் வளரும்: மனதில் நமக்கும் புதிய புதிய கற்பனைகள் பிறக்கும்’ என்று ஹரிக்கு உபதேசம் செய்வார். -

கிட்டப்பாவின் சங்கீதத்தில் பாகவதருக்கு அளவற்ற மோகம். கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் நடித்த ஸ்பெஷல் நாடகங்கள் மாதக் கணக்கில் ஒடும். பாகவதர் இயன்ற போதெல்லாம் திரும்பத் திரும்பப் போவார். கதைக்காகவும், கம்பெனியின் சீன் ஜோடனைக் காட்சிகளுக் காகவும் மட்டுமல்ல; கிட்டப்பா வேலன், வேடன், விருத்த னாகவோ; அல்லது வேறு எந்த வேடத்தில் வந்தாலும் அவருக்கு கிட்டப்பாவின் பாட்டுத்தான் முக்கியம். நேற்று பாடியதுபோல் இன்று பாடுகிற கல்யாணியோ, காம்போ தியோ இருக்காது. புதிய புதிய கற்பனைகள்-அலாதியான பிர்க்கா சாரீரம். அந்த இசையை நன்கு ரசித்து அனுப விக்கத் தெரிந்த கூட்டமாகையால்; கொட்டகையில் ஊசி விழுந்த ஒசைகூடக் கேட்கும். அவ்வளவு நிசப்தமாக இருந்து நாடகம் பார்ப்பார்கள். ஒலிபெருக்கி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில்; முன்னால் சோபாவி லிருக்கிற பிரமுகர் முதல்: முன்னுாறு அடி தூரத்தில் தரையில் உட்கார்ந்து கேட்கிற ரசிகன் வரை நன்றாகக் கேட்டு ரசிக்கும் வண்ணம் அமைந்த சாரீரம்-ஐந்தரைக் கட்டை சுருதியில் கிட்டப்பாவைப் போல் இப்படி மேல் பஞ்சமம்வரைப் போய் இனிமை.குறையாமல் யாரால் பாட முடியும்? என்று பாகவதர் பூரித்துப் போவார்.

பத்து வயதில் குருகுலவாசத்தை பூர்த்தி செய்து அரங் கேறிய பாகவதர், தமது பனிரெண்டாவது வயதிலேயே