பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி சால ஸ்-கமா? 109

பிரமாதமாப் பாடி; பெரிய பெரிய வித்வான்களின் வரிசை யில் இடம் பிடித்து விட்டவர்.

வயதும்; அனுபவமும்; ஏறஏற அவரது இசை பட்டை தீட்டிய வைரம் போல் ஒளிவீசிப் பிரகாசித்தது.

ஒருசமயம் பிரபலமான கிராமபோன் கம்பெனியொன்று பாகவதருடைய பாட்டைப் பதிவு செய்ய வந்து கேட்ட போது மறுக்காமல் கொடுத்தார். ‘தாரிநி தெலிசு கொண்டிநி’ என்னும் சுத்த சாவேரி ராகக் கீர்த்தனை இரு பாகங்களில் வெளிவந்தபோது பாகவதருக்கு ‘ராயல்டி யை அள்ளி கொடுத்தது. அதன் பிறகு பல கம்பெனிகள் அவரது இசையைத் தங்கள் தட்டுகளில் பதிவு செய்து கொள்ளப் போட்டி போட்டன.

ஆனால் சுமார் பத்துப் பாட்டுக்கள் வெளிவருவதற்குள் ஒரு கம்பெனியோடு ஏற்பட்ட தகராறு காரணமாக, இனி நீங்கள் லட்ச ரூபாய் கொடுத்தாலும் என் பாட்டு உங்களுக்கு இல்லை’ என்று சொல்லி வந்துவிட்டார். காரணம் அப்படிப் பிரமாதமானது ஒன்றுமில்லை.

பாகவதர் திவ்யமான சாரீர சம்பத்துப் பெற்றவர். கணிரென்று உச்ச ஸ்தாயிவரையில் சஞ்சரிக்கக்கூடிய வசதி யான தொண்டை. வாய்த்துக் கொண்டால் மேல் பஞ்ச மத்துக்குக்கூட அநாயாசமாகப் போய் நின்று விடுவார். ஜிலுஜிலுப்புக் குறையாது. துளி பிசிர் இருக்காது.

அன்று கல்யாணியில் நிதி சாலஸுகமா” என்னும் கிருதி பதிவாக இருந்தது. பாகவதர் குறிப்பிட்ட நேரத் துக்குப் பக்கவாத்தியங்களுடன் வந்துவிட்டார். முதல் பாகத்தில் விஸ்தாரமாக ராகம் பாடிப் பல்லவியை முடித் தார். இரண்டாவது பாகத்தில் அநுபல்லவியும், சரணத்தில் நிரவல் ஸ்வரமும் பாடினார்.