பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 O புல் பின் இதழ்கள்

ஆனால் ஏனோ தெரியவில்லை, இரண்டாவது பகுதி ஒலிப்பதிவாளருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. - மமத பந்தனயுத; நரஸ்துதி சுகமா, என்னும் அடியை மேலே நிரவல் செய்யும்போது பாகவதர் தம்மை மறந்து பாடினார். அவரது உச்சஸ்தாயிக் குரலைக் கேட்டு ஒலிப் பதிவாளர் மகிழ்ந்தார். ஆனால் கால வரம்புகளுக்காக யந்திரத்தை நிறுத்திவிட்டு; மீண்டும் பாடச் சொன்னார். பாகவதரும் பாடினார்,

ஆனால் எத்தனை தரம் பாடினாலும், தடவைக்குத் த ட ைவ பிரமாதமாகப் பாடினார். பாகவதரிடம் கற்பனைக்கு என்ன பஞ்சம்? ஆனால் அதைத்தான் கம்பெனிக்காரர் விரும்பவில்லை. பாட்டுப் பதிவுக்குரிய கால அளவில் ஏற்றத்தாழ்வு இருந்துகொண்டே இருந்தது.

இன்னும் ஒரு தடவை சரியாகப் பாடுங்கள் மகராஜ்: எடுத்து விடுகிறேன்’ என்றார்.

அவ்வளவுதான் - அதற்குமேல் ஒலிப்பதிவாளர் தவறு தலாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பாகவதருக்குக் கோபம் பிரமாதமாக வந்துவிட்டது.

அப்பொழுது இவ்வளவு நேரமா நான் சரியாகப் பாட வில்லை என்று உன் அபிப்பிராயமா? அதனால்தான் எடுக்க வில்லையா? நீ எடுக்கவே வேண்டாம். இந்தா உன் பணமும் ஆச்சு, நீயும் ஆச்சு. இனிமேல் நீயும் என்னிடம் வராதே நானும் வரவில்லை’ என்று கூறி, அங்கவஸ்திரத்தை உதறித் தோள்மேலே போட்டுக் கொண்டு வந்து விட்டார். அதன் பிறகு

தவறாக ஏதாவது நடந்திருந்தால் மன்னிக்கும்படி தங்கள் ஊழியரின் சார்பில் அந்த ஆங்கிலக் கம்பெனியே பாகவதருக்குப் பல கடிதம் எழுதியது. பாகவதர் மசியவே இல்லை. ஆனால் அந்த ஒரு பக்கத்தை அவருக்காக அந்தக்