பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி சால ள கமா? 111

கம்பெனி நெடுநாள்வரை அப்படியே அழிக்காமல் வைத்

திருந்தது.

பல மாதங்களுக்குப் பிறகு பாகவதருக்கு மீண்டும் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுக் கம்பெனி அழைப்பு விடுத்தது. அவர்களுடைய பெருந்தன்மையைக் கண்டு பாகவதரும் மனம் மாறினார்; இசைத்தட்டு முழுமை பெற்றது. அப்படி வெளிவந்த இசைத்தட்டு சங்கீத உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.

எல்லோர் வாயிலும் நித சால ஸ'கமா’ முழங்கிற்று: அந்த இசைத்தட்டு, கம்பெனிக்கும் பாகவதருக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்தது.

இப்படிச் சம்பாதிக்கிற ராயல்டி பணத்தை எல்லாம் பாகவதர் ஒரு நல்ல காரியத்துக்காக அர்ப்பித்தார். கிராம போன் கம்பெனியிலிருந்து கிடைக்கிற அந்தப் பணத்தை அவர் குடும்பச் செலவுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அத் துடன் தம் கையிலிருந்து மேலும் பணம் போட்டு ஊருக்கு மத்தியில் நல்ல இடத்தில் பஜனை மடம் ஒன்று கட்டினார். இந்தச் செய்தியை அறிந்தவுடனே பாகவதருடைய உற்ற நண்பரும் சிறந்த சங்கீத ரசிகருமான, மதுரை, மகாராஜா ஹோட்டல் பத்மநாப ஐயர், பஜனை மடத்துக்காக மிகவும் பெரிய அழகான தஞ்சாவூர் ராமர் பட்டாபிஷேகப் படமொன்றையும், படம் வைக்க வேண்டிய மண்டபச் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்தார்.

இப்படிச் சிறப்பு வாய்ந்த பஜனைமடத்தில் ஒவ்வொரு வருஷமும் ஸ்ரீராமநவமி உற்சவத்தைப் பாகவதர் மிகச் சிறப் பாகக் கொண்டாடினார். கிராமத்திலும் வெளியூரிலும் உள்ள பல பிரபுக்கள் நிறையப் பொருளுதவி செய்தனர். பஜனை மடத்துக்கு வெளியே பிரம்மாண்டமான பந்தல் போட்டுப் பத்து நாட்களும் பெரிய பெரிய வித்துவான்களை வரவழைத்து நல்ல கச்சேரிகளை நடத்தினார். தினம் ஏழை