பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. நல்ல வாரிசு

திருவிடைமருதூரில் சுந்தரியின் அழகான மிகப் பெரிய வீடு மகாதானத் தெருவில் இருந்தது. படியேறி உள்ளே நுழைந்ததுமே சுவாமிமலை வீட்டில் இருப்பதே போல் சிரித்த முகத்துடன் கூடிய பாகவதரின் மிகப் பெரிய புகைப் படமொன்று வந்தவர்களை வரவேற்கும்.

நடு ஹாலில், அழகிய வேலைப்பாடமைந்த நாற்காலி களும் சோபாக்களும் போடப்பட்டிருந்தன. பழைய பெரிய வீடாயினும் புதிய தோற்றத்துடன் காணப்பட்டது. ஆங் காங்கே விலையுயர்ந்த பொருட்களும், அழகிய பெரிய படங் களும், நிலைக் கண்ணாடிகளும், பளிங்குக்கல் பதித்த சுவர் களும் வீட்டுக்கு மதிப்பூட்டின.

ஹரியும் பாகவதரும் உள்ளே நுழைந்ததும் சுந்தரிதான் அவர்களை வரவேற்றாள்.

‘நேற்றே உங்களை எதிர்பார்த்தேன்’ என்று சுந்தரி கூறியவுடன், அது என்னவோ சுந்தரி! நானும் ஹரியும் சேர்ந்து இங்கே வர எப்போது புறப்பட்டாலும் சரி உடனே ஏதாவது ஒரு தடங்கல் வருகிறது. நேற்றுப் புறப் பட்டு; இன்று வந்து சேர்ந்திருக்கிறோம்’ என்று ஹாஸ்ய மாகக் கூறிவிட்டு எதிரில் இருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் தம் பக்கமாக இழுத்தார்.

உடனே சுந்தரி, இதோ இரண்டு நிமிஷத்தில் காபி கொண்டு வருகிறேன். சாப்பிட்டுவிட்டு பிறகு வெற்றிலை போடலாம்’ என்றாள்.