பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புல்லின் இதழ்கள்

அதற்குள் மாடியிலிருந்து இறங்கி வந்த வசந்தி

கூந்தலை ஈரம் போகக் கோதிக்கொண்டே, ஏன் அப்பா, ரெயில் பதினேழு மணி நேரம் லேட்டா?’ என்று கேலி

செய்த வண்ணம் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

வசந்தியின் ஹாஸ்யத்தை ரசித்தபடியே அவளை ஏறிட்டுப் பார்த்தான் ஹரி.

அன்றலர்ந்த மலர்போல் அழகுடன் விளங்கிய அவளைப் பார்க்கும் போதெல்லாம்; அவனுக்குக் கூடவே .சுசிலாவின் நினைவும் வரும். கைதேர்ந்த சிற்பியொருவன் ஒரே அச்சில் கடைந்தெடுத்த தந்த விக்கிரகம்போல் இருக்கும் அவர்களது உருவ ஒற்றுமையைக் கணநேரம்

மனத்துக் குள்ளே நினைத்து வியந்து கொண்டான்

வசந்தி சுசீலாவின் தங்கையாக இருந்தாலும் உடலமைப்பில், சற்றுப் பெரியவள் போலவே காணப் பட்டாள். சுருட்டைத் தலையும் தங்க நிறமும் வசந்தி என்றால் பொன்னிறமும் முழங்கால் வரை நீண்ட கூந்தலு மாகச் சுசீலா விளங்கினாள். சுசீலாவின் வட்டக் கரிய விழிகளில் எப்போதும் குறும்பும் கோபமும் துள்ளி விளை -யாடும். வசந்தியின் விழிகளில் அமைதியும் அடக்கமும்

தேங்கி நிற்கும்.

உள்ளேயிருந்து வந்த தாயாரின் குரலைக் கேட்டதும் வசந்தி எழுந்து உள்ளே சென்றாள். அவள் காதில் பூரித்த வைரத்தோடு, கன்னத்தில் வீசிக் கொட்டிற்று. சற்றைக் கெல்லாம் காபி பலகாரங்களுடன் வெளியே வந்த வசந்தி, அவர்கள் இருவருக்கும் கொடுத்தாள். பலகாரம் சாப்பிட் டானதும் பாகவதர், கோட்டு வாத்தியம் ராயர்வாள் விடுவரைப் போய்வருகிறேன்’ என்று சொல்லி புறப்பட்டுச் சென்றார். ஹரி வீட்டிலேயே இருந்தான்.