பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வாரிசு 117

சாப்பாடு முடிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் பிள்ளையவர்கள் ஹரியைக் கூப்பிட்டார். இடுப்பில் இருந்த பட்டுப் பையைப் பிரித்து, பழனி விபூதியை அவன் நெற்றியில் இட்டு ஆசிர்வதித்தார். அருகில் நின்று கொண்டிருந்த மற்றவர்களுக்கும் விபூதி கொடுத்தார்.

பிறகு வசந்தியைப் பார்த்து, இந்தத் தடவை தான் பாடாமல் ஏமாற்றி விட்டாய். இனி ஒரு சமயம் வந்தால் இப்படி அவசரப் பட்டுக் கொண்டு புறப்பட மாட்டேன். நீ பாடுகிற வரை, மாசக் கணக்கானாலும் சரி, இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். என்ன சரிதானே வசந்தி?’ என்றார்.

உடனே வசந்தி, என்ன மாமா, நானாகவா பாட மாட்டேன் என்கிறேன்? எனக்குப் பாடத் தெரிந்தால் அல்லவா பாடுவதற்கு? அப்பாவுக்குப் பெண்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கவே பிடிக்காது, அதனால் தானே அவர் என்னிடம் இவ்வளவு நாளாகச் சங்கீதத்தைப் பற்றியே பேசுவதில்லை?’ என்றாள் வருத்தத்துடன்.

இதைக் கேட்டதும் பிள்ளையவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன், அப்படியா சுப்பராமா?’ என்று கேட்டார். பாகவதர் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக

இருந்தார்.

உடனே வசந்தி, நான் பொய் சோல்லவில்லை மாமா; எனக்குப் பாட்டுச் சொல்லிக்கொண்டு நன்றாகப் பாட வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் நானாகப் என்ன செய்ய முடியும்? பாட்டுக் கற்றுக் கொள்ளுவதாக இருந்தால் கச்சேரி பண்ண வேண்டும்’ என்பது அப்பாவின் விருப்பம். கச்சேரி பண்ணப் போவதானால், நீ பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டாம்'- இது அம்மாவின்