பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 புல்லின் இதழ்கள்

உத்தரவு. இதற்கு நீங்கள்தான் மாமா தயவு செய்து ஒரு வழி செய்துவிட்டுப் போக வேண்டும்’ என்றாள் மிகுந்த

துக்கத்துடள்.

  • சுப்பராமா, நீ பிரமாதமாகப் பாடுவாய் என்று தான் எனக்குத் தெரியும். இப்படியெல்லாம் நீங்கள் ஆளுக்கொரு கொள்கையை வைத்துக் கொண்டிருப்பீர்கள் என்று தெரியாமல் கேட்டுவிட்டேன்’ என்ற பெரியவர் உடனே, ஆமாம், நானும் தெரிந்துக் கொள்ளத்தான் கேட்கிறேன்; சுந்தரி சொல்வதிலாவது ஒரு விதத்தில் காரணம் இருக்கிறது. ஆனால் நீ சொல்லுவதில் என்ன நியாயம் இருக்கிறது? பாட்டுக் கற்றுக் கொள்கிறவர்கள் எல்லாரும் கச்சேரி பண்ணித்தான் ஆக வேண்டுமா? பிறகு இவர்கள் பண்ணுகிற கச்சேரியை எல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று வருகிறவர்கள் மென்னியைப் பிடிப் பாயோ? என்னப்பா இதெல்லாம் அர்த்தமில்லாமல்?’’ என்றார்.

நான் அர்த்தம் இல்லாமல் சொல்லவில்லை பிள்ளையவர்களே. பாட்டுக் கற்றுக் கொள்கிறவர்கள் எல்லாரும் கச்சேரி பண்ணித்தான் ஆகவேண்டும்; அதை எப்படி இருந்தாலும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நன்றாகக் கச்சேரி பண்ணுகிற அளவுக்குத்தான் என்னால் உழைத்துச் சொல்லிக் கொடுக்க முடியும். கச்சேரி பண்ணும் உத்தேசம் உள்ளவர்கள் மட்டும் வரட்டும். ஆனால் பெண்களிடம் இந்தக் கண்டிப்பை எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர் களுக்கு நான் சொல்லிக் கொடுப்பதில்லை. இது என் கொள்கை. இதை வலிய நான் யார் தலையிலும் திணிக்க வில்லையே! எனக்கென்று ஒர் அபிப்பிராயம் இருந்தால் அது தப்பா?’’