பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 புல்லின் இதழ்கள்

தாலும் நினைத்தறியாத ஒரு விஷயத்தை-அவளைக் கேட்டு தெரிந்து கொள்ளாமலே அவள் உள்ளத்தில் திணிக்கலாமா?

சிந்திக்க வேண்டிய காலத்தில் சிந்திக்காமல் அகா லத்தில் பாகவதர் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒன்றுமட்டும் அவர் மனத்துக்குச் சத்தியவாக் காகப் புலனாயிற்று.

- சுந்தரி எனக்காகவே பிறந்தவள். பூர்வ ஜூன் மத்து விட்ட குறை தொட்டகுறை இருந்திருக்கிறது. இல்லா விட்டால் பிறப்பு வளர்ப்பைப் மீறி இந்தப் பிணைப்பு ஏற்பட்டிருக்க முடியாது’ -- என்ற உண்மைதான் அது.

பாகவதர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே வேதாந்தப் போக்கு அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் ஓடிக் கொண்டே யிருந்தது. லட்சுமியை மணந்து கொண்ட பிறகும், சுந்தரி வந்த பிறகும் குடும்ப வாழ்க்கையில் பாகவதர் இன்பத்தை நுகர்ந்ததெல்லாம். மிகக் குறுகிய காலந்தான். மூன்றுபெண்களும் பிறந்து வளர ஆரம்பித்தபோதே அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். இல்லறத்தைத் துறப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். அதற்கு நாதோபாசனையே சிறந்த மார்க்கம் என்று கருதி அதிலேயே முனைந்தார். சங்கீதத்துக்கே வாழ்நாளை அர்ப்பித்தார். சிறந்த மாணாக்கர்களை உருவாக்கினார்.

பிள்ளையவர்களின் வாயால் இத்தனை புகழ்ச்சிக்குப் வாத்திரமானவர்களே கிடையாது. பெரிய பெரிய வித்துவான்கள் அவருடைய ஒரு சபாஷை ஆயிரம் பொன்னாடைகளுக்கு மேலாகக் கருதுவர். அவர் தலை யசைத்தால் அவர்கள் உள்ளத்தில் குஷி பிறக்கும். அவர் வாயார வாழ்த்தி விபூதி கொடுப்பதை முருகனே விருத்த வடிவில் வந்து கொடுப்பதாக எண்ணி அள்ளிப் பூசிக்