பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 புல்லின் இதழ்கள்

தந்தையிடம் வந்து, நானும் பாட்டுச் சொல்லிக்

கொள்ளப் போகிறேன். எனக்கும் நீங்கள் சொல்லித் தாருங்கள்’ என்று வம்பு செய்ய ஆரம்பித்தாள். பாகவதருக்கு இப்போது அவள் ஆசைப் படுவது

தவறாகத் தோன்றவில்லை. ஆனாலும் இது அவசியந் தானா என்று யோசித்தார்; மனைவியிடமும் கலந்தார்.

சுசீலாவுக்கு நீங்கள், பாட்டுக்கு ஏற்பாடு செய்யா விட்டால் அவள் ஹரியைப் பாடாய் படுத்தி அவனைத் திருவிடை மருதுாருக்கும் போகவிடாமல் நிறுத்திவிடுவாள். அவள் சுபாவந்தான் உங்களுக்குத் தெரியுமே ! ஏதோ முடிந்த வரைக்கும் ஊரிலிருக்கும் போது சொல்லிக் கொடுங்கள். இல்லாவிட்டால் விட மாட்டாள்’ ‘ என்றாள் லட்சுமியம்மாள்.

அதைக் கேட்ட பாகவதர், “நான் அவளுக்குச் சொல் லிக் கொடுப்பதா? உருப்பட்டாற் போலத்தான். பாடம் நடக்காது: சண்டைதான் நடக்கும்: அழுகை

தான் மிஞ்சும். அந்த வாயாடிக்கும் எனக்கும் ஒத்து வராது. வேண்டுமானால் ஹரியையே ஏற்பாடு செய் கிறேன். அவன்தான் அவளுக்கு லாயக்கு. அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டு. எது சொன்னாலும் பதில் பேசாமல் இருப்பான். அதற்கு வேறு எந்தச் சங்கீதக்காரனும் ஒப்பமாட்டான்’ என்று கூறிவிட்டார்.

- சரி, எப்படியோ ஏற்பாடு செய்து சுசீலாவுக்கும்

ஆரம்பித்து வையுங்கள். வெட்டி வம்புக்குப் பதிலாக சங்கீதத்தையாவது கற்றுக் கொள்ளட்டும்’ என்றாள் லட்சுமி.

நல்ல நாளில் சுசீலா ஹரியின் முன்னால் உட்கார்ந்து ஸ்ா.பா. லா.., பிடித்தாள். அப்பா மற்றவர்களுக்கு ச் சொல்லிக் கொடுப்பதை வீட்டிலிருந்த படி கேட்டுக்