பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு சிஷ்யைகள் 125

கேட்டே ஏழெட்டு ஆதி தாள வர்ணங்கள் வரை, சுசீலா பாடம் செய்து வைத்திருந்தாள். அவளுடைய புத்தி சாலித்தனத்தை எண்ணி ஹரி மனத்துக்குள்ளேயே வியந்து கொண்டான். போட்டிக்காக அவள் பாட்டுக் கற்றுக் கொள்ளவில்லை; அப்படியே கற்றுக் கொண் டாலும் அது தவறல்ல என்று ஹரி தீர்மானித்தான். ஏனெனில் சுசீலாவுக்கு உண்மையிலேயே இசையில் ஆர்வம் இருப்பது தெரிந்தது. கேள்வி ஞானத்தைக் கொண்டே அவள் அடைந்திருந்த முன்னேற்றம், அவளுக்குச் சிரமமில்லாமல் மேற்பாடங்களை எடுக்க உதவியாக இருந்தது. ஸ்ரளி, ஜண்டை, ஸ்தாயி வரிசைகள், தாட்டு வரிசைகள், அலங்காரம் ஆகிய வற்றையெல்லாம் சுசீலா ஒரு வாரத்துக்குள் சரியாக ஒப்பித்து விட்டாள். ஸ்வர ஜதிகளும், கீதமும், ஒரு மாதம். பிறகு அவள் கற்று வைத்திருந்த வர்ணங் களுக்கு மெருகூட்டி மேலும் சில ஆதிதாள வர்ணங்களை ஹரி அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். சுசீலாவின் தொண்டை இனிமை ஹரிக்கு வியப்பாக இருந்தது. இந்தக் குரலை வீணே சண்டை போட்டுக் கத்தி வீணாக்குகிறாளே என்று வருந்தினான்.

பத்துப் பதினைந்து ஆதிதாள வர்ணங்களுக்குப் பிறகு, பைரவியில் அடதாள வர்ணத்தை ஹரி முதலாவதாக ஆரம்பித்தான்.

உடனே சுசீலா, எனக்குத்தான் பைரவியில் ஆதி தாள வர்ணம் பாடம் ஆகியிருக்கிறதே வேறு ஏதாவது புதிய ராகமாக எடு’ என்றாள்.

ஹரி அவளை ஒரு முறை முறைத்துப் பார்த்தான். இதுவரை நீ குருநாதரின் மகள் என்ற மரியாதை கொடுத்து நீ படுத்துகிற பாட்டுக்கெல்லாம் உட்பட் டிருந்தேன்; இனிமேல் அதை எல்லாம் மூட்டை கட்டி