பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 புல்லின் இதழ்கள்

வைத்துவிடு. இப்போது நான் உனக்குக் குரு. மரியாதை யோடும், பணிவோடும் இரு’ என்று சொல்ல அவன்

நாக்குத் துடிதுடித்தது. ஆயினும் மறுகணமே தன. எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.

“இவளை இப்படியெல்லாம் பேசி வழிக்குக் கொண்டு வர முடியாது. அப்படி வந்தாலும் அதில் சுவாரசியம் இருக்காது’ என்று எண்ணி, மனத்தில் ஒரு திட்டம் வகுத்துவிட்டான்.

“அப்போது உனக்குப் பைரவி வேண்டமா?’ என்று மிகவும் சாதாரணமாகக் கேட்பதுபோல் கேட்டான்.

சுசீலா அவனை ஒரு முறை உற்றுப் பார்த்தாள். பைரவி ராகமே இனிமேல் எனக்கு வேண்டாமென்றா சொன்னேன்? எனக்கு என்ன அத்துடன் சண்டையா மனஸ்தாபமா? ஏதாவது ஒரு புது ராகத்தில் சொல்லிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டேன்: அவ்வளவுதான்’ என்றாள்.

ஹரி மனத்துக்குள் அவளுக்கு ஆதிதாளத்தில் நடந் திருக்கிற வர்ணங்களை ஞாபகப்படுத்திப் பார்த்தான். பிறகு, சரி, ஆரம்பிக்கலாமா?’ என்று உற்சாகத்துடன் கேட்டான்.

சுசீலா சரியென்று தலையை அசைத்தாள்.

ஹரி தன் நோட்டுப் புத்தகத்தை அவள் முன்னால் பிரித்து வைத்து ஆரோகண அவரோகணத்தைப் பாட ஆரம்பித்தான்.

சுசீலா திடுக்கிட்டு ஹரியின் முகத்தைப் பார்த்தாள்.

  • கதன குதுரகலமா?”

“ஆமாம். ஏன், பெயரைப் பார்த்தவுடன் உன் குதுரகலம் இருந்த இடம் தெரியாமற் போய்விட்டது?