பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 புல்லின் இதழ்கள்

‘உன் இஷ்டத்துக்கு இங்கே பாடம் நடக்காது. வேண்டுமானால் நீ முதலில் சொன்னபடி ஆதிதாளத்தில் உனக்கு நடக்காத புதிய ராகத்தில் சொல்லிக் கொடுக் கிறேன். இல்லையென்றால் உன் இஷ்டத்துக்குக் கல்யாணியும் காம்போதியும் இப்போது கிடையாது; முதலில் பைரவி வர்ணந்தான் ஆரம்பிப்பேன். எது சம்மதம் என்று சீக்கிரம் சொல்லு. எனக்குப் பத்தரை மணி வண்டிக்குத் திருவிடைமருதுரர் போயாக வேண்டும்’ என்று ஹரி துரிதப்படுத்தினான்.

சுசீலா ஒரு கணம் அப்படியே விக்கித்துப் போனாள்.

‘எப்படி இருந்த ஹரி எப்படி மாறிப் போனான்! “ என்று அவள் மனத்துக்குள்ளேயே அதிசயித்துக் கொண் டாள். பாடம் ஏறி ஏறி வித்வத் வந்தவுடன், படிப் படி யாகத் தன்னையும் அறியாமல் உயர்ந்து போய்க் கொண்டேயிருப்பதை அவள் கவனித்தாள். இனி அவன் தனக்கு அடங்க மாட்டான் என்ற பயம் அவள் உள்ளத்தை கவ் விக் கொண்டது. ஆகவே அவனிடம் இனிமேல் முரட்டுத் தனமாக நடந்து கொள்ளுவது தவறு என உள் மனம் எச்சரித்தது. அவனே தனக்குக் குருவாக வந்து வாய்ப்பான் என்று அவள் எதிர் பார்க்கவேயில்லை. மேலும் அவன் ஆரம்பத்திலேயே அவள் தலையில் ஒரு குட்டுக் குட்டி விட்டான். அந்த வலி அவள் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது. அந்த வேதனையை அவள் ரசித்துக் கொண்டிருந்தபோது

என்ன, தூக்கம் வருகிறதா?” ஹரி அவள் சிந்தனையைக் கலைத்தான்.

‘தூக்கமா?’ ‘ அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

‘பின்னே இப்படியே தம்பூராவை வைத்துக் கொண்டு எதிரும் புதிருமாகப் போட்டோவுக்குப் போஸ் கொடுக்