பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பாடியது யார்?

‘நம்பிக்கை” என்ற மகத்தான கவசத்தைப் பூட்டித் தான் மனிதனைக் கடவுள் உலகுக்கு அனுப்பிவைக்கிறார். நம்பிக்கை இல்லையேல் வாழ்வு ஏது? அதில் ரசனைதான் ஏது?

ஆனால் பாகவதருடைய வாழ்க்கை என்னவோ ரசனையற்றுத்தான் போய்விட்டது. ரெயில் விபத்தி லிருந்து அவர் பிழைத்ததே மறுபிறப்பு என்றுதான் எல்லோரும் எண்ணினர். பம்பாய் மெயிலில் வந்து இறங்கிய பாகவதர், வண்டியிலிருந்து பிளாட்பாரத்தில் காலை வைந்தபோது வண்டி ஒரு முறை குலுங்கி முன்னும் பின்னும் அசைந்து நின்றது. பிடித்திருந்த பிடியை விட்டுப் பாகவதர் அப்படியே நிலைதவறி விழுந்து விட்டார். பஞ்சு அண்ணா பாய்ந்து வந்து பிடித்துக் கொள்வதற்குள் மண்டையில் பலமான அடிபட்டு ரத்தம் வந்தது. பாக வதரும் பிரபலமானவர், விழுந்த இடமும் பிரபலமான இடம்; கூட்டம் கூடிவிட்டது. பாகவதரை ஆஸ்பத்ரிதிக்குக் கொண்டு போனார்கள். நல்ல காலம், உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்றாலும், தலையிலும், காலிலும் அடி

பலமாகத்தான் பட்டு விட்டது.

முதல் சிகிச்சை செய்த டாக்டர் எவ்வளவு கேட்டுக் கொண்டும் பாகவதர் சென்னையில் தங்க மறுத்து, நான் ஊருக்கே போய்விடுகிறேன். அதுதான் எனக்கு நிம்மதி’ என்று கூறிவிட்டார்.