பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 புல்லின் இதழ்கள்

பாகவதருடன் பிரயாணம் செய்த சங்கீத ரசிகர் ஒருவர், “ அப்படியானால் நீங்கள் ரெயிலில் போகக்கூடாது’ என்று கூறித் தமது காரை அனுப்பி வைத்தார்.

பாகவதர் வந்து சேருவதற்குள் அந்த விஷயம் ஊரில்

பரவிவிட்டது. அவர் சுவாமிமலை வந்ததும் லட்சுமி யம்மாள் உடனே அந்தக் காரை திருவிடைமருதுாருக்கு அனுப்பி வைத்தாள். சுந்தரியும் வசத் தியும் ஹரியும்

புறப்பட்டு வந்தபோது வீடு முழுவதும் கூட்டமாக இருந்தது.

பாகவதருடைய தலையில் இருந்த கட்டைப் பார்த்து சுந்தரியும் வசந்தியும் கலங்சிவிட்டனர். ஹரி அவர் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தான். நினைவு திரும்பிய போதெல்லாம் அவர் ஹரியின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தார்.

அவன் அவரருகிலேயே இருந்து இரவுபகல் பாராமல் உதவி வந்தான். பகலெல்லாம் அவனுக்கு, கச்சேரி கேட்டு எழுதுகிறவர்களுக்குப் பதில் எழுதுவதும், கச்சேரி ஒப்புக் கொண்டிருக்கிற இடங்களுக்குப் பாகவதர் சுகவீனம் காரணமாக வர இயலாமை குறித்துக் கடிதம் எழுதுவது மாக வேலைகள் அதிகம் இருந்தன.

வசந்தியும் சுந்தரியும் வந்த அன்றே திரும்ப ஊருக்குச் சென்றுவிட்டனர். பிறகு, தினம் ஒருதடவை அவர்களில் யாராவது ஒருத்தி வந்து பார்த்து விட்டுச் சென்றாள்.

தந்தையைப் பார்க்க வேண்டுமென்று தோன்றிய போதெல்லாம் வசந்தி தயங்காமல் வந்தாள். காயத்திரியும் பெரியம்மாவும் அவளிடம் மிகவும் அன்போடு பழகினார்கள். விரைவிலேயே பாகவதருடைய உடல் தேறி வந்தது. தலைக்கட்டைப் பிரித்தார்கள்; தழும்பு ஆறி வந்தது. ஆனாலும் குளிக்கவோ, எழுந்து நடனமாடவே கூடாது என்று டாக்டர் கட்டளை பிறப்பித்திருந்தார்.