பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடியது யார்? 135

ஒப்புக்கொண்ட கச்சேரிகள் எல்லாம் ரத்தாகின்றனவே என்று அவர் மனம் வேதனைப்பட்டது. அந்த வேதனை களை மறந்திருக்க அவருக்கு ஒரே மருந்துதான் பயனுள்ள தாக உதவியது; ஹரியை ஓயாமல் பாடச்சொல்லிக் கேட்பதுதான் அது

இந்தச் சந்தர்ப்பத்தில் ஹரிக்குப் புதிய பாடங்கள் நிறைய நடந்தன. சாதாரண சமயமாக இருந்தால் பாகவதர் மாதத்தில் பத்து நாள் ஊரில் தங்குவதே அபூர்வம். அதிலும் பாடம் நடத்த நான்கு நாள் கிடைப்பதே அரிது. இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை ஹரி பரிபூர்ணமாகப் பயன் படுத்திக். கொண்டான்.

பாகவதர் அவனுக்கு சிம்மநந்தன தாளத்தில் ஒரு பெரிய பல்லவியைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதை அவன் பாடிக் காட்டிக் கொண்டிருந்த போது, வாசலில் நாலைந்து பேர்-பாகவதரைப் பார்க்க வந்தவர்கள்உள்ளே பாடிக் கொண்டிருப்பதை அறிந்து திண்ணையி லேயே உட்கார்ந்திருந்தனர்.

லட்சுமி அம்மாள் அவர்களைத் தெரிந்துக் கொண்டு உள்ளே வந்து உட்காரும்படி கேட்டுக் கொண்டும் அவர்கள் பாட்டு முடிகிற வரையில் திண்ணையிலேயே இருந்தனர். காரணம், வந்திருந்தவர்கள் பஜனை மடத்தின் நிர் வாகிகள்: பாகவதரின் குணத்தை நன்கு அறிந்தவர்கள்.

பாடம் முடிந்து லட்சுமியம்மாள் போய்க் கூறவும், பாகவதர் அவர்களை ‘வாருங்கள் வாருங்கள்’ என்று அன்புடன் வரவேற்றார். சிறிது நேரம் உடல் நிலையைப் பற்றி விசாரித்த பின் அவர்கள் வந்த காரியத்தைக் கூறினர்:

வருகிற வெள்ளிக் கிழமையிலிருந்து பஜனை மடத்தில் பரீராமநவமி உற்சவம் ஆரம்பம். அன்று உங்கள் கச்சேரி