பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடியது யார் ? 137

பிறகு நீங்களே பாடிக் கொண்டிருந்தீர்கள். அதனால் உங்களைத் தொந்தரவு செய்யாமல் ஆனந்தமாகத் திண்ணை பில் உட்கார்ந்த படியே கேட்டுக்கொண்டிருந் தோம்.’

பாகவதர் மனத்துக்குள் சிரித்துக் கொண்டார். அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பாவோடியது.

சற்று முன்பு உள்ளே பாடியது என் பாட்டைப் போலவா இருந்தது? இந்தக் கேள்வியைக் கேட்ட போது அவரது மனம் பெருமையால் பூரித்தது.

என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? உங்கள் பாட்டு எங்களுக்குத் தெரியாதா?’’

இல்லை, நீங்கள் ஏமாந்துவிட்டீர்கள். இந்த உடம் போடு நான் பாடுகிறதாவது? வாயைத் திறந்தால் தலையில் விண் விண்’ என்று தெறிக்கிறது. நீங்கள் கேட்டது ஹரியினுடைய பாட்டு.”

பாகவதர் கூறி முடிக்கு முன்பு, வந்திருந்தவர்கள் ஆச்சரியத்தினால் வாயைப் பிளந்தனர்.

என்ன அண்ணா இது? ஷண்முகப்பிரியாவில் அத்தனை பெரிய பல்லவியை இத்தனை அழகாகப் பாடி யது ஹரியா? நீங்கள் இப்போது சொல்லியுங்கூட எங்க ளால் நம்ப முடியவில்லை, அண்ணா!’

  • சரி, உங்களுக்கும் ஹரியினுடைய பாட்டுப் பிடித்துப் போய்விட்டது. அப்படியானால் நான் ஒன்று சொல்லு

கிறேன்; அதன் படிச் செய்யலாமா?’

  • தாராளமாக.’

‘இந்த வருஷம் எனக்குப் பதிலாக ஹரியைப் LITTLவைத்து விடுவது; என்ன சொல்லுகிறீர்கள்?’

பு. இ.-9