பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாடியது யார் ? 141

உடனே சுசீலா, அவன் வைத்தியர் வீட்டுக்குப் போயிருக்கிறான். என்னப்பா விஷயம்?’ என்றாள்.

‘ஒன்றுமில்லை; கச்சேரிக்கு முன்னால், எல்லாப் பக்கவாத்தியங்களோடும் இரண்டு நாளைக்குப் பாடி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அங்கே வந்து மிருதங்கக்காரருடைய ததிங்கினத்தோமி லும் கஞ்சீராக் காரருடைய மோராவிலும்'; கடக்காரருடைய கோர்வையிலும் மிரண்டு தாளத்தைக் கோட்டை விட்டு விடாமல் ஒத்திகை பார்த்துக் கொள்வது நல்லதல்லவா? பஞ்சு அண்ணா ஒருவரைத்தான் அவனுக்குத் தெரியும். குழந்தை மாதிரி அநுசரித்துக் கொண்டு போய்விடுவார் நல்ல பழக்கமுண்டு. மீதிப் பேர் அவனுக்குப் புதிசுதானே? அவர்களை நான் வரச் சொன்னேன் என்று இவன் போய்ச் சொன்னால் உடனே வருவார்கள். அதற்குத்தான் கூப்பிடுகிறேன்.’

‘சரி அப்பா, ஹரி வந்ததும் உடனே சொல்லுகிறேன்’ என்று கூறிய சுசீலா உள்ளே சென்றாள்.

பாகவதர் அவள் செல்லுகிற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“இந்தச் சுசீலா இன்னும் கொஞ்சங்கூடத் திருந்த வில்லை; அப்படியே தானே இருக்கிறாள்? இவளுக்கு எப் போது கோபம் வரும், எப்போது சிரிப்பு வரும், அழுகை வரும் என்று இன்னும் யாராலும் கண்டு பிடிக்கவே முடிய வில்லையே! ஹரியிடம் இவள் எப்படியோ நடந்துகொண்டு போகட்டும்; பரவாயில்லை. விரட்டி விரட்டிப் பிடிக்கிற இவளுடைய பூனைச் சுபாவத்துக்கு ஒத்தாற்போல், பதுங் கிப் பதுங்கி வாழ அவனும் கற்றுக் கொண்டுவிட்டான். ஆனால் இந்தச் சுபாவத்தோடு நாளைக்கு இவள் புருஷன் வீட்டில் போய் எப்படி வாழப் போகிறாள்? அல்லது இவளது இந்தக் குணத்துக்கு யாரால் ஈடு கொடுக்க முடியும்?’ என்று எண்ணி எண்ணிக் கவலைப்பட்டார்.