பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புல்லின் இதழ்கள்

  • கூப்பிட்டீர்களா அப்பா? -

மல்லாந்தபடி யோசித்துக்கொண்டே இருந்தவர். சட்டென்று குரல் வந்தபக்கம் திரும்பிப் பார்த்தார். பக்கத்தில் காயத்திரி நின்றுகொண்டிருந்தாள்.

உன்னை நான் கூப்பிடவில்லையே?’ பாகவதர் ஆச்சரியத்துடன் கூறினார்.

பாருங்கள் அப்பா, சுசீலாவின் குறும்புத்தனத்தை. அப்பா உன்னைக் கையோடு கூப்பிடுகிறார்’ என்று பருத்திக் கொட்டை அரைத்துக்கொண்டிருந்த என்னை இங்கே துரத்தி விட்டிருப்பதை’’. காயத்திரி சிணுங்

கினாள்.

போகட்டும்: அதுதான் பருத்திக் கொட்டை தின்கிற ஜன்மம் என்று தெரிந்திருக்கிறதே! நீ போய் வேலையைப் பார். ஹரி வந்தால் என்னிடம் அனுப்பி வை’ என்று சமாதானம் கூறி அனுப்பினார்.

காயத்திரி மறு வார்த்தை பேசாமல் தலையை அசைத்துவிட்டு உள்ளே சென்றாள். அவருடைய உள்ளம் ஒரு முறை குலுங்கியது- தாங்க முடியாத துக்கம் அவரது நெஞ்சுக் குழியை அடைத்துக் கொண்டது. அதை மென்று விழுங்குவதற்குள் பிராணனே போய் விடும் போலிருந்தது. கண்ணிலிருந்து நீர் மாலை மாலையாக வழிந்தோடியது.

“நிச்சயம் சுசீலா அமோகமாக, ஆனந்தமாக வாழ்க்கையிலே துளிக் பி.ட கஷ்டப்படாமல்தான் இருப்பாள். அவளை போன்ற இறுமாப்புச் சுபாவமும்: உலகத்தை எட்டி உதைக்கிற முழங்கால் உறுதியும் உள்ளவர்களால்தான் இந்தப் பூமியில் நடமாட முடியும். இல்லாவிட்டால் இந்தப் பொல்லாத உலகம் காயத்திரியைப் போன்ற மாணிக்கங்களை மண்ணில் உருட்டிக் கல்லால் தான் நசுக்கி விடும்!”