பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடியது யார் ? 143

- அம்மா காயத்திரி; உன்னைப்போல இத்தனை சத்தியமும் தன்மானமும் ரோஷமும் உள்ளவர்களுக்கு இது காலமல்ல. இல்லாவிட்டால், பூவும் மஞ்சளுமாகப் பூத்துக் குலுங்கிப் புதுவாழ்வு வாழ வேண்டிய இத்தனை சிறிய வயதில் உன் நெற்றி பாழாகி இந்தக் கோலம் வந்திருக்குமா; வீட்டுக்கு மூத்தப் பெண்; செல்லமாக வளர்ந்தவள்; உன் குணத்துக்கு ஒரு குறையும் வரக் கூடாது; நீ பிரமாதமாக வாழவேண்டும் என்று எண்ணித் தானே பணத்தைத் தண்ணிராக இறைத்துத் தங்க விக் கிரகம் மாதிரி ஜோடி சேர்த்தேன்? ஒரு வேளை தங்கமாக இருந்ததனாலேதான் அவனுக்கு ஆபத்து வந்ததோ? எமதர்ம ராஜனுக்கு உன் புருஷனை அபகரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஆசை வந்ததோ? -திருமணமாகி ஆறே மாதத்தில் என் பெண்ணின் தாலியைப் பறித்துக் கொண்டு போய்விட்டாயே; கொள்ளைக்காரா! என்று குலுங்கக் குலுங்க அழுத பாகவதர், அப்பா’ என்ற குரலைக் கேட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினார். எதிரே வசந்தி நின்று கொண்டிருந்தாள்.