பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 புல்லின் இதழ்கள்

“ஹரியின் அரங்கேற்றத்துக்கு அம்மாவும் நானும் வரட்டுமா அப்பா?’ என்று கேட்டாள் வசந்தி.

‘இது என்னம்மா அசட்டுக் கேள்வி? உன் அம்மா வந்திருந்து ஆசிர்வதித்து அனுப்பாமலா ஹரி கச்சேரிக்குப் போய் விடுவான்? நீயும் அம்மாவும் வெள்ளிக் கிழமை காலையிலேயே வந்துவிருங்கள் என்று கூறியபோதே லட்சுமி யம்மாள் கையில் ஒரு பாட்டிலுடன் அங்கே வந்தாள்.

மனைவியைப் பார்த்ததும் பாகவதர் சிரித்துக் கொண்டே, ‘உன் பெண் என்னவோ சொல்லுகிறாள். பார். என்ன என்று கேள்’ என்று தூண்டிவிட்டார்.

லட்சுமியம்மாள் உடனே, அதையும் கேட்கிறேன். நீங்கள் முதலில் இதைக் கேளுங்கள். சாப்பிடக் கூப்பிட்டு அனுப்பினேன். வரவில்லை. காலையில் வந்தவளுக்குப் பசிக்காமல் எப்படி இருக்கும்? பசியே இல்லை என்று ஹரியிடம் சொல்லியனுப்பியிருக்கிறாளே உங்கள் பெண்’ என்றாள் கணவரைப் பார்த்து.

  • சரிதான். நீயும் ஒரு புகாரை வைத்துக் கொண் டிருக்கிறாயா? நாம் இரண்டுபெரும் இப்படி மாறி மாறிக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தால் குழந்தை திணறிப் போய்விடுவாள். அது இருக்கட்டும்: கையில் என்னவோ கொண்டு வந்திருக்கிறாயே, என்ன அது? என்று மெது

வாகப் பேச்சை மாற்றினார் பாகவதர்.

“சுந்தரிக்கு ஆவக்காய் உறுகாய் என்றால் ரொம்பப் பிடிக்கும். நேற்று சித்துாரிலிருந்து உங்கள் ஆந்திர சங்கீத ரசிகர் கொண்டு வந்தாரே, அதில் ஒரு பாட்டிலை அனுப்பலாம் என்று கொண்டு வந்திருக்கிறேன், வசந்தி யிடம் கொடுத்து அனுப்பட்டுமா?’’

‘ஏன்? நீ தான் ஒரு தடவை வசந்தியோடு திருவிடை மருதூருக்குப் போய் வாயேன். ஹரியின் அரங்கேற்றத் துக்குக் காலையிலேயே எல்லாருமாக இங்கே வந்து