பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 புல்லின் இதழ்கள்

அதனதன் இடத்தில் கவிழ்த்து முடிப்பதற்குள் அப்பாவுக்குக் காபிக்கு நேரமாகிவிடும். உடனே பால் கறக்கப்

போய்விடுவாள்.

ஹரி யோசித்தான். அவனுக்குப் பாத்திரம் தேய்க்கத் தெரியாது; மாடு கறக்கவும் தெரியாது. பாத்திரம் தேய்ப் பதைவிட மாடு கறப்பது அவனுக்குச் சுலபமாக பட்டது. அதில் காயத்திரிக்கு உதவி செய்தால் என்ன? ஒரு வேலை என்றால் ஒரு வேலை. அது அவளுக்கு மிச்சந்தானே?

ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல், தேய்க்க வேண்டிய பாத்திரங்களை முதலில் கிணற்றங்கரையில் கொண்டு போய்ப் போடலாம் என்று எண்ணினான். அப்போது அடுக்களையிலிருந்து வந்த காயத்தரி அவன் கையில் இருந்த வெண்கலப் பானையைப் பிடுங்கிக் கீழே வைத்தாள்.

ஆண்பிள்ளைகள் செய்ய வேண்டிய வேலையைத் தான் ஆண்பிள்ளைகள் செய்ய வேண்டும். இது உன் வேலை அல்ல. போய்ச் சாதகம் பண்ணு. கச்சேரிக்கு இன்னும் இரண்டு நாள் கூட இல்லை. அப்பாவை நான் பார்த்துக் கொள்கிறேன். அவரைப் பற்றிய கவலைகளை மறந்து நீ மாடிக்கு போ’ என்று உத்தரவு பிறப்பித்து விட்டுப் பற்றுப் பாத்திரங்களுடன் பின்கட்டை நோக்கி நடந்தாள்.

ஹரி அவள் சென்ற திக்கையே வெறிக்கப் பார்த்த படி நின்று கொண்டிருந்தான். காயத்திரியின் உருவில் ஒரு பெண் தெய்வம் அசைந்து செல்வது போல் தோன்றியது. ஆனால் அந்தத் தெய்வத்துக்கு ஆலயமும் இல்லை வழி பாடும் இல்லை. சாந்தித்தியம் இல்லாத மூர்த்தியைப் போல் அவள் வாழ்வை இழந்துவிட்ட ஒரு சிலை!

தன்மீது மட்டும் அல்ல, தன் முன்னேற்றம் பற்றியும் அவள் கொண்டிருக்கும் அக்கறையையும், சற்று முன்பு