பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O - புல்லின் இதழ்கள்

நிற மணல் படிந்திருந்தது. அதன் மீது யாரோ விண்ணி லிருந்து சொரிவதே போல வெண்மையும் செம்மையும், பொன்னிறமும் நீலமும் கலந்த நறுமலர்கள் மரங்களிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தன.

ஹரி பாடிக்கொண்டே இருந்தான். தெய்வீக மணத்தைப் பரப்பிய அந்த இசையில் பிரபஞ்ச மலர் ஒவ்வோர் இதழாக மலர்ந்தது. கீழ்வானம் வர்ண

ஜாலங்களை வாரி இறைத்த வண்ணம் வெளுத்து வந்தது.

ஹரியின் அந்த இசைக்குப் போட்டியாக பாடுவதே போல் பறவை யினங்கள் இனிய குரலில் சுப்ரபாதம் பாடிக் காலைக் கதிரவனை வரவேற்றன. தாய்மை பெற்ற பெண்ணின் பசுமை அழகோடு செடி கொடி மரங்கள் பூர்ண கும்பம் ஏந்தி நிற்பனபோல் தங்கள் மலர்க் கொத்துக்களைத் தாங்கிய வண்ணம் இசையில் லயித்து நின்றன.

பாற்கடலைக் கடைவதேபோல நாபியிலிருந்து நாதத்தைக் கொணர்ந்து ஹரி பாடிக்கொண்டே இருந்தான். அமுதமென ஸ்வரக் கோர்வைகள், அவனுடைய தொண்டை யினின்றும் விளம்ப, மத்திம, துரித கால கதிகளில் புரண் டோடிக்கொண்டிருந்தன. செங்கோளமாகக் கீழ்த் திசையில் கதிரவன் உதயமானான், கமலம் நாணத்தோடு சிரித்து மலர்ந்தது. சிருஷ்டியின் அற்புதத் தத்துவத்தை விளக்கும் மலர்கள் ஆதித்தனைச் சிரம் தாழ்த்தி வணங்கின.

இரவெல்லாம் கடுங்குளிரில் தன் காதலை நினைந் துருகிய நிலமகளை ரவி தன் பொற்கரங்களால் தாவி அணைத்தான். அந்த மஞ்சள் நிற மேனி அழகி, வைரம் பதித்த அழகிய புல்லின் இதழ்களைத் தன் மலர் விழிகளால் பார்க்கிறாள். கதிர்கள் உயிரினத்துக்குப் புத்துயிரூட்டி வாழ்த்துகின்றன.

ஒவ்வொரு நாளும் புறத்தே நிகழும் இந்த விசித்திர மான இயற்கையின் நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் உள்ளத்திலே கண்டு, இசையிலே தோய்ந்து ஹரி