பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 புல்லின் இதழ்கள்

நான் பொய் சொல்லுகிறேன் என்று மலைக்கிறாயா? செம்பை எடுத்துக் கொண்டு மடியைத் தொடு. சொத்’ தென்று உதை கொடுக்காவிட்டால் என் பேர் காயத்திரி அல்ல. இந்த மாடு என்னைத் தவிர வேறு யாருக்கும் மசியாது என்று உனக்குத் தெரியாதா? பேசாமல் உள்ளே போய்ப் பாடு. என்னிடம் உனக்கு அன்பு இருப்பது எனக்குத் தெரியும். அதை இப்படியெல்லாம் காட்டிப் பசுவிடம் பல்லை உடைத்துக் கொள்ள வேண்டாம். கச்சேரி செய்கிற இந்த அழகான முகத்திலே கட்டுப்

போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா?

ஹரிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. * அழகான

முகம்!-காயத்திரியின் வாயால் கேட்ட அந்தச் சொல். அவனுக்கு அமுதமாக இனித்தது.

சொல்லச் சொல்லக் கேளாமல் இன்னும் கொல்லை யிலேயே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறாய்? போவிஸ் காரர்கள் கெடுபிடியும் வேண்டித்தான் இருக்கிறது. இந்தச் சுசீலா எங்கே தொலைந்து போனாள்?” என்னைப் பயமுறுத்துகிறீர்களா?’ ‘ “பயமுறுத்தவில்லை. இன்னும் ஐந்து நிமிஷத்தில் பாட்டுச் சத்தம் காதில் விழாவிட்டால் அப்பாவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல் லி விடுவேன்! “

மறுநிமிஷம் ஹரி அங்கிருந்த மின்னலைப் போல் மறைந்து மாடிக்குச் சென்றான். ஆனால் அதே சமயம் படியேறும்போதே பாகவதர் அறையிலிருந்து வந்த முனகல் சப்தமும்: ‘ஹரி ஹரி’ என்று நூலிழையில் வந்த தீனமான ஒலியும் அவனை மேலே செல்ல முடியாமல் அங்கேயே தடுத்து நிறுத்தின.

அறைக்குள் ஹரி ஓடிச்சென்று பார்த்தபோது பாக வதர் மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்தார். நெஞ்சுவலி பொறுக்க முடியவில்லை என்று ஜாடை காட்டினார்.