பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் கறக்கவா? 155

ஹரி சட்டென்று அருகில் உட்கார்ந்து நெஞ்சைத் கட விவிட்டான். முதுகில் நீலகிரித் தைலத்தைத் தடவி நன்றாகத் தேய்த்துவிட்டான். கொல்லையில் இருந்த காயத்திரிக்குக் குரல் கொடுத்தான். அவள் வந்து பார்த்த போது வலி பொறுக்க முடியாமல் பாகவதர் கண்களை முடிக்கொண்டிருந்தார்.

“அப்பாவுக்கு என்ன ஹரி?’ என்று மிக்க பரபரப் புடன் கேட்டாள்.

“என்னவோ தெரியவில்லை. திடீரென்ற நெஞ்சை வலிக்கிறதாம். துடித்துக் கொண்டிருக்கிறார். போய் டாக்டரை அழைத்து வரட்டுமா?’ ‘

வேண்டாம். கொஞ்சம் பார்த்துக் கொண்டு கூப்பி டலாம். முதலி ல் கொஞ்சம் தவிடு வறுத்துக் கொண்டு வருகிறேன். ஒத்தடம் கொடுத்துப் பார்ப்போம்’ என்று சொல்வி அடுக்களையை நோக்கி விரைந்தாள் காயத்திரி.

வாணலியை, அப்பா படுத்திருந்த அறைக்குக் கொண்டு வந்து, சிறுகச் சிறுக தவிட்டை வறுத்துத் துணியில் கிழியாகக் கட்டி ஹரியிடம் கொடுத்தாள். அந்த இளஞ் சூடு பாகவதருக்கு அப்போது இதமாக இருந்தது. மூச்சு முன்னைவிடச் சற்று சுகமாக விட முடிந்தது. விழி களைத் திறந்து ஹரியையும் காயத்திரியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, சுசீலா எங்கே?’ என்று கேட் டார்.

இப்போது வந்துவிடுவாள். நீங்கள் துரங்குங்கள்’ என்று காயத்திரி அப்பாவை வேண்டிக்கொண்டாள்.

இரவு முழுவதும் பாகவதர் முனகிக்கொண்டும் விழித் துக்கொண்டும் இருந்தார். அதனால் உறக்கம் வந்தவர் களாலும் தூங்க முடியவில்லை. இந்த உபாதையைச் சுசீலாவினால் ஒரு நாள் கூடத் தாங்க முடியவில்லை. அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டே இருந்த அவளுக்குத் தூக்கம் துாக்கமாக வந்தது. அடுக்கடுக்காகக்