பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. குருவின்றி வேறில்லை

பாகவதர் எதிர்பாராமல் திடீரென்று நெஞ்சுவலி வந்து அவஸ்தைப்படுவது புதிய அநுபவமல்ல. இரண்டு வருஷங் களுக்கு முன்பு மதுரையிலும், ஆறு மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலும் கச்சேரி முடிந்ததும் இதேபோல் நெஞ்சுவலி கண்டது. அங்குள்ள ரசிகர்களும், சபாக் காரியதரிசியும் பதறிப் போயினர். ஐந்து நிமிஷத்துக்குள் மூன்று டாக்டர்கள் வந்துவிட்டனர். அவர்கள் பாகவத ருக்கு உடனடியாகச் சிசிச்சை செய்து குணப்படுத்தினாலும் அவரது உடம்பைப் பரிசோதித்த அவர்கள், ! உங்கள் இதயம் பலவீனமாக இருக்கிறது. நீங்கள் சிறிது காலம் கச்சேரியே செய்யக்கூடாது. நல்ல ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்தத் தவறவில்லை.

ஆனால் பாகவதர் அதைச் சரி என்று கேட்டுக் கொண்டாலும், பிறகு தம் விருப்பப்படிதான் நடந்து கொண்டார். பாடத் தெரிந்த வாயை மூடத் தெரிய வில்லை.

““வேறு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன். ஆனால் என்னால் பாடாமல் மட்டும் இருக்கமுடியாது. அப்படிப் போகிற உயிரானால் அது ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருக்கும்போதே போகட்டும். தம்பூராவை மீட்டிக்கொண்டே ராமனுடைய பாதார விந்தத்திலே போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை” என்று கூறிவிட்டார்.