பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு வின்றி வேறில்லை 159

அதன்படியே அஞ்சாமல் தொழில் புரிந்தார். ஆனால் மூன்றாவது தடவையாக இப்போது நெஞ்சுவலி வந்து விடவே தம்முடைய எதிர்காலத்தையும் தமக்குப் பிற்காலத் தையும் பற்றி அவருக்கு அச்சம் உண்டாயிற்று. சிந்தனை யில் ஆழ்ந்து போனார்.

திருவிடைமருதுாரிலிருந்து சுந்தரியையும் வசந்தியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த லட்சுமிக்கு, கணவருடைய கட்டிலைச் சுற்றியிருந்த கூட்டத்தையும், டாக்டரையும் பார்த்ததும் வயிற்றைக் கலக்கியது. வைத்தியம் பார்த்த டாக்டரைக் காயத்திரி கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும் இருதயத்தையே நிறுத்திவிடும்போல் இருந்தன. இந்தக் கண்டத்துக்கு அண்ணா பிழைத்தது மறு பிழைப்புத்தான். ஆனால் இனிமேல் கொஞ்ச நாளைக்குக் கண்டிப்பாக அவர் பரிபூரண ஒய்வு எடுத்துக் கொண்டாக வேண்டும்’ என்று இதற்கு முன் பலர் கூறியதையே அவரும் எச்சரித்து, மருந்தும் மாத்திரைகளும் எழுதிக் கொடுத்துச் சென்றார்.

டாக்டர் கூறியபடியே மருந்துகளை வாங்கி வந்து, அவர் குறிப்பிட்ட நேரப்படி ஹரி தவறாமல் கொடுத்தான். காலை ஏழு மணிக்கு இருந்த நிலைமை மாறி, பத்து மணிக்குப் பாகவதரால் சுமாராகப் பேச முடிந்தது.

எல்லாரையும் மிகவும் பயமுறுத்தி விட்டேன்; இல்லையா?’ என்று சுந்தரியையும் வசந்தியையும் பார்த்து அவர் கேட்டார்.

அதற்கு அவர்கள் எந்தவிதப் பதிலையும் கூறாமல், உண்மையிலேயே பயந்தபடி நின்றனர்.

பக்கத்தில் இருந்த ஹரியின் பக்கம் அவர் திரும்பிப் பார்த்தார். பஜனை மடத்திலிருந்து யாராவது வந்திருந் தார்களா?’ என்று கேட்டார்.