பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புல்லின் இதழ்கள்

காரியதரிசியும். கணபதியும் வந்திருந்தார்கள். இரவு எட்டு மணிக்குக் கச்சேரியாம். ஏழரைக்கெல்லாம் புறப் பட்டு வந்தால் போதும் என்று சொல்லிவிட்டுப் போனார் கள். மருந்து வாங்கிக்கொண்டு வரும்போது பார்த்தேன்: வழக்கம்போல் பந்தலெல்லாம் பெரிதாகப் போட்டிருக் கிறார்கள். வழக்கத்தைவிட இந்தத் தடவை சுவரொட் டியைப் பெரிசாக அச்சடித்து, எல்லா வித்துவான்களுடைய பெயர்களும் போட்டிருக்கிறார்கள்’ என்று கூறினான் ஹரி.

‘முதலில், உன் பெயர் போட்டிருக்கிறதா?’ என்று பாகவதர் கேட்டார். ஹரி அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் மெளனமாக நின்றான். எனக்கு ஏது பெயர்? நானும் என் பெயரும் எல்லாம் நீங்களே உருவாக்கிய தல்லவா?’ என்று அவன் மனத்துக்குள்ளேயே எண்ணங்கள் உருண்டோடின,

என்ன ஹரி, நான் கேட்டேனே? நோட்டீசில் இன்றையக் கச்சேரி யார் என்று போட்டிருக்கிறது?’ என்று. பாகவதர் அதே கேள்வியைத் திரும்பவும் கேட்டார். அதற்குள் வசந்தி சிரித்துக் கொண்டே, நான் சொல்லு கிறேன் அப்பா, உங்களுடைய பெயர்தான் போட்டிருக் கிறது’ என்றாள்.

‘'என் பெயரா?’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பாகவதர்,

“ஆமாம் அப்பா. சங்கீத சாகரம் மகாவித்துவான் சுப்பராம பாகவதர் என்பதைத்தான் பெரிய கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். பிறகு அவர்களின் சிஷ்யன் ஹரி பாடுவார்’ என்பதைப் பூச்சிப் பறக்கிற மாதிரி எழுத்தில், அருகில் வந்து பார்த்தாலன்றித் தெரியாதபடிப் போட்டிருக்கிறார்கள்’ என்று தன் குறையை மறைமுகமாகத் தெரிவிப்பதுபோல், ஆதங்கத் துடன் கூறினாள் வசந்தி.