பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவின்றி வேறில்லை + 161.

‘பரவாயில்லை. பெரிய எழுத்தில் போடாவிட்டாலும்? சிறிய எழுத்தில் பெரிய வித்துவான் இருக்கிறான் என்பதை ஹரி நிரூபித்துவிட்டால் போகிறது’ என்று மெதுவாகக் கூறிவிட்டுப் பிறகு, ஹரியிடம் தனிமையில் கூறினார்: “நீ இப்போதே அரசூருக்குப் போய் உன் அப்பா, சித்தி, மாமா எல்லாரிடமும் உன் அரங்கேற் றத்தைப் பற்றிச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வந்துவிடு’ என்றார்.

ஆனால் வாயே திறக்காத ஹரி, அந்த இடத்தை விட்டு அசையவில்லை. பாகவதர் வற்புறுத்தினார்.

முன்பே ஒரு சமயம் உன் மாமா, இன்னும் அரங்கேற்றம் ஆகவில்லையா?” என்று கேட்டதாகச் சொன்னாய். இப்போது சொல்லாவிட்டால் பின்னால் பேச்சுக்கு இடமாகாதா?’ என்று அவர் கேட்டுக் கொண்

டிருந்த போதே ஹரி, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து குருவின் இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டு கூறினான்;

எனக்கு இவைதாம் உலகத்தில் தாய் தந்தை, சுற்றம், உறவு அனைத்தும் என்றோ எல்லாவற்றையும் உதறி வந்துவிட்ட என்னைக் கொண்டு போய் மீண்டும் எதிலும் ஒட்ட வைக்க வேண்டாம். என்னைப் பற்றி எதற்கும் கவலைப்பட, இந்த உலகில் யாரும் இல்லை. அவர்களுக்கு வேண்டியவை நானும் என் நலனுமல்ல; என் உழைப்பும், நான் ஈட்டும் பொருளுமே. நான் உழைத்துப் பொருளிட்டும் போது என் கடமையைச் செய்தால் போதும். இப்போது என்னைத் தாங்கள் எங்கும் அனுப்ப வேண்டாம்’ என்று ஹரி மிகவும் பணிவோடு மறுத்துக் கூறிவிட்டான்.

பாகவதர் அவனை அன்புடன் அனைத்து, அவன் முதுகை வருடி, உன் விருப்பம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்’ என்று கூறினார்.