பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 புல்லின் இதழ்கள்

நெஞ்சிலிருந்த ஏதோ பெரிய பாரத் தைக் கீழே உதறி விட்டாற் போல்; அதன் பிறகுதான் ஹரியின் மனம் சமா தானம் அடைந்தது. சற்றுக் காலாறக் காவிரிக் கரைப் பக்கமாக நடந்து வந்தான்.

பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் இப்படிச் செய் வார்கள் என்று, ஹரி நினைக்கவே இல்லை. தன்னுடைய குரு அழைத்துங்கூட, அவர்கள் ஒத்திகைக்கு வராததுதான் அவன் மனத்தில் வேதனையை மூட்டியது. பாகவதர்தாம் படுக்கையில் விழுந்து விட்டாரே, இனி மேல் என்ன?” என்ற நினைப்பா, அல்லது, அரங்கேற்றக் கச்சேரிதானே!” என்கிற அலட்சியமா? எதுவாக இருந்தாலும், இவர் களுக்குப் புத்தி வர வேண்டும் என்று அவன் மனம் தவித்தது. ஆனால்

ஹரி வீட்டுக்குள் நுழைந்த போது, பிடில் பஞ்சு அண்ணாவும், மிருதங்கம் ராஜப்பாவும் பாகவதர் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்திருக்கிற காரணத்தை உணர்ந்து கொண்ட ஹரி, சட்டென்று உள்ளே சென்று தம்பூரா வோடு வந்து உட் கார்ந்து கொண்டான்.

‘பத்து நாளாவது பிடில் மிருதங்கத்தோடு சேர்த்துப் பாட வைத்து, உன்னைத் தயார் பண்ண வேண்டுமென்று நினைத்தேன். பஞ்சு அண்ணாவுக்கும், ராஜப்பாவுக்கும் இன்றுதான் தயை பிறந்திருக்கிறது. இப்போது நீ, மேடையில் கச்சேரி பண்ணுவதாகவே நினைத்துக் கொண்டு பாடு. அதுதான் ஒரே வழி. இப்போது கூட இவர்கள் இருவரும் இங்கே வரவில்லையானால் நீ என்ன செய்வாயோ அப்படி நினைத்துக் கொண்டு பாடு’ என்றார் பாகவதர் ஹரியிடம்.

இந்த வார்த்தை பஞ்சு அண்ணாவுக்கும் ராஜப்பா விக்கும் சற்று துன்புறுத்துவதாகத்தான் இருந்தது.