பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவின்றி வேறில்லை 163.

எத்தனைதான் வெளியூர்க் கச்சேரிகள் இருந்தாலும், ஹரியின் அரங்கேற்றத்துக்கு அவர்கள்தாம் பக்க வாத்தியம் என்று ஏற்பாடான விஷயம். மனம் இருந்தால், நிச்சயம் எப்படியும் ஒரு வாரமாவது ஹரியுடன் சேர்ந்து வாசித்து அவனது கூச்சத்தைப் போக்கியிருக்க முடியும். அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் பாகவதர் அப்படிக் கூறினார் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

அதே போல, குருவின் நோக்கம் என்ன என்பதும், அவர் எதை மனத்தில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறார் என்பதும் ஹரிக்கும் நன்கு புரிந்தது. ஆனால் “பஞ்சு அண்ணா மீதும், ராஜப்பா மீதும் உள்ள நம் வருத் தத்தைக் காட்ட வேண்டிய இடம் இது அல்ல”, என்று மனத்துக்குள் முடிவு செய்துகொண்டான். மறுகணம் எல்லாவற்றையும் மறந்து, சுமார் இரண்டு மணி நேரம் ஹரி பாடினான். ஆனால் திருவிடைமருதூரில் பக்கவாத் தியம் இல்லாமல் அவன் பாடிய திறமையில் பாதியைக் கூடப் பாகவதரால் அன்று ஹரியின் பாட்டில் காண

முடியவில்லை. ஒரு வேளை பையன் பெரிய பக்க வாத்தி யத்தைப் பார்த்ததும் பயந்துவிட்டானோ?’ என்று அவர் மனதுக்குள் எண்ணிக் கொண்டார். ஆயினும் தம்

ஐயத்தை அவர் வெளிப்படுத்தி அவனை அதைரியப்படுத்த விருப்பமில்லாமல் உற்சாகப்படுத்தினார்.

பஞ்சு அண்ணாவும், பிரமாதமாகப் பாடுகிறானே! கீர்த்தனைகள் எல்லாம் கச்சிதம். ராகங்கூட பரவாயில்லை. போகப் போகச் சரியாகிவிடும். நிரவலும், ஸ்வரமும் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாகப் பாடினால் கச்சேரி ‘ஏ ஒன்’ தான். வழி’ எல்லாம். அவ்விடத்துப் பாணி அப் படியே சொட்டுகிறது’ என்று கூறினார். ஆனால் அதை யெல்லாம் பாகவதர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.