பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 புல்லின் இதழ்கள்

சரி, அப்போ நீங்கள் எல்லாரும் நேரே மடத்துக்கே வந்துவிடுகிறீர்களா? இவனும் இங்கிருந்து நேரே அங்கே வந்துவிடுவான்’ என்று கூறி, “என்ன ஹரி?’ என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

“ஆமாம், நானும் அப்படித்தான் நினைத்தேன். இவர்கள் நேரேயே மடத்துக்கு வந்துவிடட்டும் நாம் இங்கிருந்து போய்விடலாம்’ என்றான்.

அப்படியே’ என்று பஞ்சு அண்ணாவும் ராஜப்பாவும் விடை பெற்றுக்கொண்டு, ஹரியைப் பார்த்துத் தலையை ஆட்டிச் சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகு ஹரி தம்பூராவைக் கீழே வைத்தான் கட்டிலில் இருந்த பாகவதருடைய பாதங் களில் முகத்தைப் பதித்துக்கொண்டு சிறு குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுதான். அந்த அழுகைக்குக் காரணம் அவருக்கு மட்டும் புரிந்தது. அவனைத் தேற்றினார்.

உலகத்திலுள்ள மகிழ்ச்சியெல்லாம் உருண்டு திரண்டு பாகவதரின் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. சுசீலாவும் வசந்தியும் கச்சேரிக்குப் போகத் தங்களைச் சிங்காரித்துக் கொண்டிருந்தனர். அதிலும் அவர்களுக்குள் போட்டி மூண்டது.

சுசீலாவும் வசந்தியும் புடவையையும் பின்னலையும் போட்டி போட்ட் மாற்றி மாற்றி அலங்காரம் செய்து கொள்வதைக் கண்டு, கச்சேரி செய்யப் போவது ஹரியா அல்லது இவர்களா என்று எண்ணி சுந்தரியும் லட்சுமியும் சிரித்துக் கொண்டனர்.

ஹரி கச்சேரிக்குத் தயார் செய்து கொண்டு குருவின்

அருகில் வந்து நின்றான். அவனைத் தம் பக்கத்தில் உட்காரும்படி சமிக்ஞை செய்தார் பாகவதர்.