பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவின்றி வேறில்லை 1.65

இதற்குள் வசந்தி நச்சரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் ஹரியின் நினைவுக்கு வந்தது. கேட்டால் நடக்காது, சரியில்லை என்பதுடன், அதைப்பற்றிக் குரு விடம் கேட்கவும் அவனுக்குத் தைரியமில்லை.

ஆயினும் அவள் அந்த அறைக்குள் வருகிற சமயம் பார்த்து, ‘வசந்திக்கு உங்களிடம் ஏதோ கேட்க வேண்டு மாம்” என்று மெதுவாகக் குருவிடம் கூறினான்.

பாகவதர் பெண்ணைப் பார்த்தார். ஒன்றுமில்லை யப் பா: இன்று இவர் கச்சேரிக்கு நான் தம்பூராப் போடலாமா என்று கேட்டேன்; அதுதான்’ என்றாள்.

அதற்குப் பாகவதர் பதில் சொல்வதற்குள், சுசீலா ஹரியின் தம்பூராவையே கையில் எடுத்துக்கொண்டு வந்த படி அப்பா, இன்று நான்தான் கச்சேரிக்கு தம்பூரா போடப் போகிறேன்’ என்ற வண்ணம் அறைக்குள் நுழைந்தாள். இதைக் கண்ட ஹரிக்கும் வசந்திக்கும் தூக்கிவாரிப் போட்டது.

பாகவதர் நிதானமாக வசந்தியின் பக்கம் திரும்பி, அதோ அந்த அறையில் என்னுடைய தம்பூரா இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு வா’ என்றார். வசந்தி சந்தோஷத்தோடு வேகமாகச் சென்று அதை எடுத்துக் கொண்டு வந்தாள்.

சரி, நீங்கள் இரண்டு பேரும் சுருதி சேர்த்துக் கொண்டு, தம்பூரா போடுங்கள். ஹரியின் கச்சேரியை இன்னொரு நாள் சாவகாசமாக வைத்துக் கொண்டால் போகிறது. அதற்கு இப்போது என்ன அவசரம்? இன்று உங்கள் தம்பூராக் கச்சேரி நடக்கட்டும்’ என்றார்.

அப்பா இப்படித் தங்களை ஏககாலத்தில் அவமானப் படுத்துவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. வசந்தி தம்பூராவை அதன் இடத்தில் வைத்து விட்டுத்