பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவினறி வேறில்லை 171

“இப்படியே அவன் மேடையிலும் பாடிவிட்டால்...?'” என்று எண்ணிப் பார்க்கையில், அவரையும் அறியாமல் ஒருவிதக் கவலையும் பயமும் அவர் மனத்தைச் சூழ்ந்து கொண்டன.

‘ஹரி எப்படிப் பாடிக் கச்சேரியை முடித்துக் கொண்டு வந்துவிட்டாலும்; எனக்கு எதிரில் யாரும் அவனைப்பற்றி உண்மையான விமரிசனத்தைக் கூறமாட்டார்கள். நல்லதை மிகைப்படுத்திக் கூறினாலும் கூறுவார்களே தவிர; நன்றாக இல்லாவிட்டால் அதைச் சொல்லவே மாட்டார்கள். என் வீட்டிலிருந்து போயிருப்பவர்களில் எல்லாருமே விஷயம் தெரிந்தவர்கள். லட்சுமிக்கும், காயத்திரிக்கும் யார் எது பாடினாலும், எப்படிப் பாடினாலும் எல்லாமே பிரமாதந் தான். சுந்தரிக்கு நோட்டம் தெரியும். ஆனால் நன்றாக இல்லாததை என் மனம் புண்படும் என்று கூறமாட்டாள். சுசீலா தாட்சண்யமில்லாமல் உள்ளதைக் கூறக்கூடியவள். ஆனால் ஹரியைப் பொறுத்த வரையில் அவன் அவள் விரோதி. தேவாமிருதமாகப் பாடினாலும் அவள் குறை. கூறாமல் இருக்கமாட்டாள். வசந்திக்கு இப்போதிருந்தே ஹரியிடம் குருபக்தி பொங்கி வழிகிறது. குருநிந்தனைக்கு ஒப்பமாட்டாள்; உண்மை வராது. ஆக, அந்தரங்கமான இவர்கள் இத்தனை பேரையும் விட்டு, ஹரியின் பாட்டைப் பற்றி, ஊரிலுள்ள இன்னொருவர் சொல்லித்தானா நான் நல்லது கெட்டது தெரிந்து கொள்ளவேண்டும்? இப்படி ஒரு துரதிர்ஷ்டம் எனக்கு ஏற்பட வேண்டுமா? என்று எண்ணும் போதே தாங்க முடியாத துக்கம் அவரது உள்ளத்தை மூடிக் கொண்டது. அப்போது ஐயா ! என்ற பழக்கமான குரல் அவர் செவியருகில் ஒலித்தது.