பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 புல்லின் இதழ்கள்

அதன் பிறகு ஹம்ஸத்வனி ராகத்தை விரிவாகப் பாடி வாதாபி கணபதிம்’ என்ற தீrதர் கிருதியைப் பிரமாதமாகப் பாடினான்.

பஞ்சு அண்ணாவுக்கு இரண்டாவது பாட்டிலேயே வேர்த்து விட்டது. ராஜப்பாவின் பேச்சைக் கேட்டுப் பயலைத் தப்பாக எடை போட்டுவிட்டோம். ஒத்திகைக்கு வரவில்லை என்பதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் பயல் ஆரம்பத்திலேயே இப்படி தண்ணிர் காட்டு கிறான்: இன்னும் என்ன பல்லவியை, எத்தனை களைச் சவுக்கத்தில் தயார் பண்ணி வைத்திருக்கிறானோ? இந்த ராஜப்பாவுக்கு என்ன, தொப்பியைத் தட்டிக் கொண்டு போய்விடுவான். பாட்டுக்கு ஈடு நான் அல்லவா கொடுத் தாகவேண்டும்? இரண்டுங்கெட்டான் இடத்தில் ஸ்வரத்தை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்க்கிறான். வாங்கி வாசிக்கா விட்டால் எனக்கல்லவா அவமானம்?’ என்ற கவலை அவரைப் பிடித்துக் கொண்டது. அவர் அதை மறைத்துக் கொண்ட வண்ணம், பாடுகிற ஹரியை மிகவும் ரசித்து, “பலே! சபாஷ்!” என்று சமயம் வாய்த்த போதெல்லாம் அவனைக் குஷிப்படுத்தி, அவனுடைய அபிமானத்தைத் தம் பக்கம் திருப்ப முயன்றார்.

ஆனால் ஹரியோ, ஆரம்பத்தில் இரண்டு மணி நேரத் துக்கு அபூர்வ ராகமாகவும், புதிய புதிய கீர்த்தனைகளாக வுமே பாடிக்கொண்டிருந்தான். இந்தக் களேபரத்தில், பஞ்சு அண்ணாவுக்குப் பழக்கமான உருப்படிகளுக்குங்கூடத் தடுமாற்றம் கண்டுவிடும் போலிருந்தது. உண்மையிலேயே பஞ்சு அண்ணா அத்தனை வருஷ அநுபவத்தில், அன்று போல் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தொழில் செய்ததில்லை. அவருடைய மேதா விலாசத்தை விழுங்கு கிற மகா மேதையாக ஹரி கச்சேரி செய்துகொண் டிருந்தான்.