பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O புல்லின் இதழ்கள்

மெய்மறந்து பொருள் செறிந்து பாடும் போது கேட்பவர்கள் மெய் சிலிர்த்துப் போவார்கள்.

இன்று அந்தக் கலையில் ஹரி அப்படியே தன் வாரிசாகவே விளங்குவதைக் கண்ட போது, முருகா இது நிச்சயமாக நான் கற்றுக் கொடுத்த வித்தை மட்டுமல்ல; மங்கி இருண்டிருக்கும் பெட்ரோமாக்ஸைப் பின் போட்டுப் பிரகாசமடையச் செய்வானே; அதைப் போல் - இவன் உள்ளத்தில் அக்கினிக் குழம்பாகக் கனன்று கொண்டிருந்த இசையைத்தான், சிறிது துரண்டி விட்டிருக்கிறேன்: அது ஜெகஜ்ஜோதியாக இன்று சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.

ஆனால், இந்த ஒளி விளக்கை அடைளாளம் கண்டு: தேடிக் கொணர்ந்து தூண்டி விட்டு: இசை உலகிற்கு அறி முகப்படுத்திய பெருமை ஒன்றுதான் எனக்குரியது'- என் றெல்லாம் மனம் போனபடி பாகவதர் எண்ணிக் கொண் டிருந்தார்.

ஆம்! - ஹரியின் அன்றையப் பாட்டு, கற்றுக் கொடுத் தவரையே, பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தது.

விதம் விதமான மலர்களை நாடிச் சென்று; சுவை யுள்ள தேனைத் திரட்டி உண்ணும் வண்டுகளைப் போல் எண்ணற்ற வித்வான்களின் இசைகளைக் கேட்டு; அவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள சிறப்பு அம்சங்களையெல்லாம் ஹரி தனதாக்கிக் கொண்டிருந்தான்.

அவன் மோஹனம் பாடிய போது மஹாராஜபுரமும்: தோடி பாடிய போது-ராஜரத்தினம் பிள்ளையும் கண்முன் வந்து நின்றார்கள்.

தன் பாட்டைத் தவிர, இப்படிப் பலதரப்பட்ட பிரபல வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளையெல்லாம் நிறையக் கேட்டு; ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்று உபதேசித்தவரும்; அதற்கான வாய்ப்புக்களை அளித்து அவனை உருவாக்கியவரும் பாகவதரேதான்.