பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 புல்லின் இதழ்கள்

விழுதுகளுமாய் அண்டம் பரப்பி நிற்கும் பெரிய ஆலமரம் கண்ணுக்குத்தெரியாமல் இருப்பதுபோல் இருந்த ஹரியைஅவர், உளTம Tர , - நீ பல்லாண்டு பேரும் புகழுடனும் வாழ வேண்டும்’ என்று மனம் நிறைந்து வாழ்த்தினார்.

ராஜப்பா தனிஆவர்த்தனத்தைப் பிரமாதமாக முடித்து விட்டுச் சோர்ந்துபோய்: அப்ளாஸைப் பற்றி நினைக்கவே நேரமின்றிச் சோடா குடித்துக் கொண்டிருந்தார். கர கோஷம் காதைப் பிளந்தது.

வண்டியில் இருந்த பாகவதர் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். ஹரி கல்யாணி ராகம் பாடியபோது அவரது விழிகளில் படர்ந்துவந்த கண்ணிர், அவன் பல்லவியை அநுபவித்துப் பாடிக்கொண்டிருந்தபோது கரை கடந்துவிட்டது. அதன் பொருள், அவரது உள்ளத்தில் பெரும் கிளர்ச்சியை மூட்டித் தம்மையும் மீறி அவரை உணர்ச்சி வெள்ளத்திலாழ்த்தி விட்டது. மேலும் அந்தப் பல்லவியை அவர் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கவே இல்லை.

தனி ஆவர்த்தனத்திற்குப் பிறகு ஹரி பாடிய அஷ்ட பதியிலும்; அருட்பாவிலும் அவன் ரசிகர்களை மெய் மறக்கச் செய்து விட்டான்.

  • தாயாகித் தந்தையுமாய்த்

தாங்குகின்ற தெய்வம்சேயாக எனை வளர்க்குந்

தெய்வ மகா தெய்வம், ‘’

என்னும் வள்ளலாரின் அருட்பா வரிகளை ஹரி மனமுருகிப்

பாடும்போது-அவன் உள்ளத்தில் குருநாதர்தான் குடி: கொண்டிருந்தார். o

கேட்பவர்கள் மட்டுமின்றி பாடுகிற ஹரியே கண்கலங்கி விட்டான். குரல் கம்மி வார்த்தைகள் தொண்டையில்

இடறின.