பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 புல்லின் இதழ்கள்

யிலேயே அவர் இப்படி ஒர் உணர்ச்சியை அநுபவித்த தில்லை. எல்லாரும் தம்மைப் பிரமாதமாகப் பாடுவதாகப் புகழ்வதைத்தான் அவர் கேட்டிருக்கிறார். ஆனால் அப்படி அனைவரும் புகழும் படி தம் பாட்டு எப்படி இருக்கும் என்பதை அவர் அன்றுதான் முழுக்க முழுக்க அநுபவித்தார்.

ஆயுளில் நல்ல சிஷ்யனை உருவாக்கி, அற்புதமான பரம்பரையை உண்டாக்கி விட்டோம்; இனிமேல் இந்த உயிர் போனாலும் இருந்தாலும் அக்கறை இல்லை என்று தமக்குள்ளேயே பேசிக் கொண்டார்.

அரை மணி நேரத்துக்கு மேல் அவகாசம் இல்லை’ என்று கூறித் திறப்பு விழாவுக்கு வந்திருந்த கலெக்டரும் அவர் மனைவியும் ஹரி மங்களம் பாடி முடிக்கிற வரையில் உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையவில்லை.

கச்சேரி முடிந்ததும் கலெக்டர் காரியதரிசியைக் கூப்பிட்டு, “நான் ஒரு இரண்டு வார்த்தை பேச வேண்டுமென்று ஆசைப் படுகிறேன்; பேசலாமா?’ ‘ என்றதும் காரியதரிசிக்கு ஆனந்தமும் ஆச்சரியமும் தாங்க வில்லை. ‘பேசுங்கள். தாராளமாகப் பேசுங்கள்’ என்று மேடைக்கு அழைத்துப் போனார்.

நல்ல சங்கீத ஞானமுள்ள அந்தக் கலெக்டர் உணர்ச்கி வசப்பட்டு ஹரியைப் பாராட்டிப் பேசி, தம் மனைவி கொடுத்த தங்கச் சங்கிலியையும் பரிசாக ஹரிக்கு அணி வித்து விட்டுப் புறப்பட்டார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கச்சேரி முடிந்ததும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஹரியைப் பார்க்க மேடையைச் சுற்றிலும் கூடிவிட்டனர். கலெக்டரை வழியனுப்பிவிட்டு வந்த காரியதரிசி ஹரியை மடத்திலேயே சாப்பிட வேண்டுமென்று வற்புறுத்தினார்.