பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்றம் 185

ஆனால் ஹரி, குருநாதரைப் பார்த்து வணங்கி விட்டுத்தான் சாப்பாட்டைப் பற்றிய விஷயமெல்லாம்’ என்று பிடிவாதமாகச் சொல்லிப் புறப்பட்ட போது, கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், “அதோ செட்டி மண்டபத்துக்குப் பக்கத்தில் மாட்டு வண்டியில் தான் பாகவதர் இருக்கிறார்’ என்று கூறினார். இதைக் கேட்டதும் பிரமித்துப்போன ஹரி, மறுநிமிஷம் கையில் பிரசாதத்துட்ன் செட்டி மண்டபத்தை நோக்கி விரைந் தான். ஆனால் அங்கே பாகவதரோ, வண்டியோ இல்லை.

அத்தனை பெரிய கூட்டத்தில், கச்சேரி முடிந்ததும் ஹரி இருந்த இடத்தை லட்சுமியும் மற்றப் பெண்களும் எப்படி நெருங்க முடியும்?

‘நாம் மெதுவாக வீட்டுக்குப் போய் விடலாம். ஹரி பின்னால் வரட்டும். வண்டிக்காகக் காத்திருந்தால் நேர

மாகி விடும்’ என்று லட்சுமியம்மாள் எல்லாரையும் அழைத்துக்கொண்டு, கூட்டத்தின் மத்தியிலிருந்து விடுபடுவ தற்குள் சுசீலா, ஐயோ, அம்மா!’ என்று பெரிதாக

அலறினாள். பக்கத்தில் இருந்தவர்கள், என்ன, என்ன? ‘ என்று பரபரப்புடன் கேட்டனர்.

என் நெக்லஸை யாரோ அறுத்துக் கொண்டு

போய்விட்டார்கள் அம்மா!’ என்று சுசீலா குழந்தை போல் அழுதுகொண்டே தன் கழுத்தைத் தடவிக் காட்டினாள். தங்க நெக்லஸ் கண்மூடிக் கண் திறப்ப

தற்குள் பறி போய்விட்டது. இதற்குள் விஷயம் காட்டுத் தீ போல் பரவி, “திருடன், திருடன்!’ என்ற குரலும். “அதோ ஒடுகிறான், பிடியுங்கள், பிடியுங்கள்!’ என்ற கோஷமும் வட்டாரம் முழுவதும் பரவிவிட்டன.

லட்சுமியம்மாளும் சுந்தரியும் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றனர். வசந்தியின் மனமோ சுசீலா படும்

பு. இ.-12