பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்றம் 187

பாம்பாக அடங்கி ஒடுங்கித் தன் தாயின் நிழலில் 1றைந்து கொண்டே அப்பா முகத்தில் விழிக்க அஞ்சி வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.

கச்சேரி முடிந்து எல்லாரும் வந்து விட்டதைக் கூடக் கவனிக்காமல் மெய் மறந்து பாடிக் கொண்டிருக்கும் பாகவதரிடம் லட்சுமியம்மாள் சற்றுக் கோபமாகவே கேட்டாள்: ‘கதவைத் திறந்து போட்டுக் கொண்டு, இப்படிக் கண்ணையும் மூடியபடி உட்கார்ந்து பாடு கிறீர்களே! போன இடத்தில்தான் பறி கொடுத்தாயிற்று. இங்கேயும் எவனாவது உள்ளே புகுந்து குடிக்கிற செம்பையும், கட்டிக் கொள்கிற துணியையும் கொள்ளை யடித்துக் கொண்டு போகட்டும். அப்புறம் எல்லாருமாகச் சேர்ந்து தெருவில் போய் நிற்கலாம்’ என்று படபட வென்று பேசினாள்.

பாகவதர் சட்டென்று தம்பூராவை நிறுத்திவிட்டு மனைவியின் முகத்தைப் பார்த்தார். மறுகணம் அவ ருடைய பிரகாசமான முகம் வாடிக் கறுத்தது. ஹரியின் பாட்டை எட்ட இருந்து கேட்ட தம்மைவிட: அருகில் இருந்து கொண்டு; அங்கே அவனுக்குக் கிடைத்த எல்லாக் கெளரவங்களையும் கண்ட லட்சுமிதான் அதிக மகிழ்ச்சி யடையக் கூடியவள். கச்சேரி முடிந்ததும் அவர்கள் எல்லாரும் ஒரே மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வருவார்கள் என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஹரி உட்பட அத்தனை பேருடைய முகமும் சாம்பிக் கிடந்தன, ஏதோ நடந்துள்ளது’ என்பதை அறிந்த அவர், என்ன விஷயம்? எல்லாரும் ஏன் இப்படிப் பேய் அறைந் தாற் போல் இருக்கிறீர்கள்?’ என்றார் பாகவதர்.

  • எல்லாம் உங்கள் பெண் சுசீலாவைக் கேளுங்கள்: சொல்லு வாள். போட்டாப் போட்டியும், பொறாமையும் இருந்தால் இப்படித்தான் கைமேல் பலன் கிடைக்கும்.