பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. குருதட்சணை

பாகவதருக்கு வாழ்க்கையில் இரண்டு குறைகள் இருந்தன. பிள்ளை இல்லாதது ஒன்று; தமக்குப் பிற் காலத்தில் பெயர் சொல்லச் சிறந்த சிஷ்யன் ஒருவனாவது வேண்டுமே என்பது மற்றொன்று. இப்போது அவருக்கு அந்த இரண்டுமே கிடைத்துவிட்டன. பணத்தையும் காசையும் சம்பாதித்துவிடலாம். இந்த இரண்டு இன்பங் களையும் இறைவனாகக் கொடுக்காத வரையில் அநுபவிக்க முடியுமா?

அவற்றையே அடைந்த பிறகு, அற்ப நகையும் பண்டமுமா பெரியவை? கண் மூடித் திறப்பதற்குள் மகாவித்துவான் ஒருவர், கையில் இருந்த தோடாவைக் கழற்றிப் போட்டார்; ஊருக்கெல்லாம் அதிகாரி ஒருவர் பொன்னாலும் பூவாலும் மாலையைக் கழுத்தில் போட்டு வாயாலும் விண்ணுயரப் புகழ்ந்துவிட்டுப் போகிறார். இதற்கு இணை உண்டா? இவையெல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய பாக்கியங்களா?”

எல்லாரும் உள்ளே சென்றவுடன், ஹரி, கையில் இருந்த தோடாவையும், சங்கிலியையும் குருவின் முன் வைத்து அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.

யார் சந்தோஷப்பட்டால் என்ன? கக்சேரிக்கு உட்கார்ந்தது முதல்; நீங்கள் எதிரில் இருந்து கேட்கிற பாக்கியத்துக்கு நான் கொடுத்து வைக்கவில்லையே என்ற வேதனையுடன் தான் பாடினேன்’’ என்று ஹரி கூறியதும்