பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தட்சணை 191

பாகவதர் இடைமறித்து, *நான்தான் நீ வர்ணம் பாட ஆரம்பிப்பதற்கு முன்னாடியே வண்டியில் வந்துவிட் டேனே! நீ கல்யாணி பாடும்போதெல்லாம் நான் அழுது கொண்டேதான் கேட்டேன். பஞ்சு அண்ணாவையும் ராஜப்பாவையும் ஒத்திகைக்கு வராத கோபத்தை வைத்துக்கொண்டு நீ விரட்டியதையும் ரசித்துக்கொண்டே இருந்தேன். ஆனால் நீ கல்யாணி பாடியதைக் கேட்டு, வீட்டுக்கு வந்ததும் நான் செய்ய எண்ணியதை எனக்கு முந்தி, முத்தையா பாகவதர் செய்து விட்டார். ஆனால் அதற்காக உன்னை விட்டுவிடுவேன் என்று எண்ணாதே. எங்கே, உன் வலக் கையைக் காட்டு’ என்று கூறியவர். மடியில் இருந்த ஒரு தங்கத் தோடாவை எடுத்து அவனது வலக்கரத்தில் இழுத்துப் பூட்டினார்.

அப்போது அங்கே வந்த சுந்தரி தன் கையில் இருந்த ஒரு வைர மோதிரத்தை எடுத்துப் பாகவதரிடம் கொடுத்தாள்.

பாகவதர் அதை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டு, ஹரியைப் பார்த்து, நீ எத்தனை தோடாக்களும் மெடல் களும் சங்கிலிகளும் வாங்கினாலும் சரி, சுந்தரியின் இந்த மோதிரத்துக்கு அவை ஈடாகா: சுந்தரியே உன்னைப் பாராட்டிப் பரிசளித்திருக்கிறாள் என்றால் அதற்கு இணையே இல்லை. இவள் அவ்வளவு பெரிய விதுவி'” என்றார். உடனே சுந்தரி, மோதிரத்தை நான் ஹரிக் கென்று சொல்லியா கொடுத்தேன்? இத்தனை நேரம் பஜனை மடத்தில் நீங்கள் பண்ணின கச்சேரிக்காக ஹரிக்குப் பரிசா? அந்த மோதிரம் உங்களுக்குத்தான்’ என்றாள்.

இதைக் கேட்டதும் பாகவதர் கடகட வென்று சிரித் தார். சிரித்துவிட்டு உடனே, ‘இப்போது இப்படிச் சிரிப்பதுகூடக் குற்றமாகி விடும். பாவம் ! லட்சுமி நெக்லெஸ் கெட்டுப்போன கவலையில் இருக்கிறாள்.'” என்று கூறி, “இன்று ஹரியின் கச்சேரியைக் கேட்டவர்கள் எல்லாரும் சொல்லுகிறதைத்தான் நீயும்