பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 புல்லின் இதழ்கள்

சொல்லுகிறாய், அதற்காக - பாடுபட்டவனுக்குத்தானே பரிசு கொடுக்க வேண்டும்?’ என்று பாகவதர் கூறினார்.

உடனே சுந்தரி, நானும் அதைத்தான் சொல்லு கிறேன். பாடுபட்டவர்களுக்குப் பலன் வேண்டாமா? அதைக் கொடுக்காவிட்டால் கற்றுக்கொண்டவனுக்குத் தான் வித்தை தக்குமா? அவனை இப்படிப் பாடும்படிச் செய்ய நீங்கள் பட்ட பாட்டுக்கு, ஹரியின் குருதட்சனை யாகத்தான் நான் உங்களுக்கு இந்த மோதிரத்தைத் தருகிறேன். இதை அங்கீகரித்து அணிந்துகொண்டு அவனை ஆசீர்வதியுங்கள்’ என்று கூறினாள்.

சுந்தரியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பாகவதர் பிரமித்துப் போய் அவளைப் பார்த்தார். ஹரி மெய்சிலிர்த்துப் போனான். எவ்வளவு பெரிய சம்பிர தாய ரீதியான விஷயத்தை எப்படிப்பட்ட சமயத்தில் சுந்தரி நினைவில் வைத்துக்கொண்டு அதை நிறைவேற்று கிறாள்!” என்று அவளுடைய அறிவின் விசாலத்தை அவர் வியந்தார்.

ஹரியோ, கண்ணிலிருந்து மாலை மாலையாகக் கண்ணிர் வழிந்தோடச் சுந்தரியைப் பார்த்துத் தன் இரு கைகளையும் கூப்பி, அம்மா நீங்கள் என்னிடம் கொண்டுள்ள கருணைக்கு வணக்கங்கள். ஆனால் நீங்கள் இப்போது கூறிய விஷயத்தை நான் எப்பொழுதும் மறந் ததே இல்லை. ஆனால் பரம ஏழையான நான் பணத்துக்கு எங்கே போவேன்? வித்யா பூர்த்தி தினத்தில் குருவுக்குக் காணிக்கை செலுத்தக்கூட விதியற்ற நிலையில் இருக் கிறேனே என்ற கவலை என்னை உயிருடனேயே கொன்றது. ஆனால் என் மனக்குறையைத் தெய்வமே முன்னின்று தீர்ப்பதேபோல், குருதட்சணை கொடுப்பதற் கென்றே இரு பரிசுகள் கிடைத்தன போலும்’ என்றவன்

முத்தையா பாகவதர் போட்ட தோடாவையும், கலெக்டர் கொடுத்த சங்கிலியையும் கழற்றித் தேங்காய்