பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நெஞ்சிலே முள்

முடியிருந்த அறையின் கதவுகளைத் திறந்து கொண்டு ஹரி கையில் தம்பூராவுடன் வெளியே வந்தான். குளுமை யான இளங்காற்று அவனைத் தழுவிக்கொண்டே அறை யினுள் புகுந்தது. காலை எட்டரை மணி வண்டிக்குப் பாகவதர் ஊரிலிருந்து வருகிறார். அவரை அழைத்து வர அவன் ஸ்டேஷனுக்குப் போயாக வேண்டும்.

தம்பூராவை மூலையில் சார்த்திவிட்டு அவசர அவசர மாகக் குருநாதருடைய அழுக்குத்துணிகளை மூட்டையாகச் சுருட்டிக்கொண்டு காவிரிக்குப் புரப்பட்டான் ஹரி. சலவைக்குச் சலவை சாயம் மாறிக்கொண்டே ரு மட்டமான துணியைப் போல-கணத்துக்குக் கணம் வானத் தின் நிறம் வெளுத்துக்கொண்டே வந்தது. தெருவில் இரண் டொரு வீடுகளில் சாணம் தெளிக்கிற சத்தம் கேட்டது. காலை நீராட்டத்தை முடித்துக் கொண்டு, வைதிகர்களும், வயோதிகர்களும், சில பெண்களும் ஆற்றிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். சிலர் தெருவில் இருந்த கயிற்றுக் கட்டிலி லிருந்து எழுந்திருக்கவே இல்லை. திண்ணையில் படுத்திருந்த காளையர்களில் சிலர், போர்வை தெருவில் நழுவி விழுந்து கிடப்பதுகூடத் தெரியாமல் குறட்டை விட்டுத் துரங்கிக் கொண்டிருந்தனர்.

ஹரி வீட்டுக் கொல்லைப்புறமாகத் திரும்பிய போது யாரோ அங்கிருந்து மெல்லிய குரலில், ‘ஹரி, ஹரி!’ என்று தன்னை அழைக்கிற சப்தத்தைக் கேட்டுத் திரும்பினான். கொல்லையில் பால் கறந்துகொண்டிருந்த பாகவதரின் பெரிய பெண் காயத்திரி, கையில் இருந்த பால் பாத்திரத்து டன் அவனை நோக்கி வேகமாக வந்தாள்.