பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 புல்லின் இதழ்கள்

டாக்டர் குறித்துக் கொடுத்துச் சென்ற மருந்துகளை வாங்கிக் கொண்டு ஹரி வீட்டை அடைந்த போது காரியதரிசியின் குரல் கேட்டது. உள்ளே நுழைந்ததும் வேறு இரண்டு புதிய நபர்கள் பாகவதரின் அருகில் நாற்காலி யில் உட்கார்ந்து பேசுவதைக் கண்டான்,

மருந்தும் கையுமாக உள்ளே வந்த ஹரியைக் கண்டதும் புதியவர்கள் எழுந்து வணக்கம் தெரிவித்துவிட்டு அமர்ந்தனர்.

காரியதரிசி, அருகில் இருந்தவர்களை ஹரிக்கு அறிமுகம் செய்து வைத்து, இவர்தாம் கரூரில் புதிதாகத் துவங்கியிருக்கும் தும்புரு கான சபாவின் செயலாளர், நேற்று உங்களுடைய கச்சேரியைக் கேட்டுப் பரவசமாகி விட்டார். இவருக்கு உங்கள் பாட்டு மிகவும் பிடித்திருக் கிறது. அடுத்த மாதமே அவர்கள் சபாவில் உங்களுடைய கச்சேரியை வைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். உங்களுக்கு எந்தத் தேதி செளகரியப்படும்? என்ன ரேட் கொடுக்க வேண்டியிருக்கும்? என்றெல்லாம் கேட்டார். நேரிலேயே போய்ப் பேசிக் கொள்வோம் என்று அழைத்து வந்துவிட்டேன்’ என்று கூறி, “இதோ, இவரும் என் நண்பர்தாம். வேலூரில் புரந்தரதாஸர் உற்சவம் ஒவ் வொரு வருஷமும் சிறப்பாக நடத்துகிறார்’ என்று அறிமுகப்படுத்தியபோது: ‘ஏன், நம் அண்ணாவுக்கே தெரியுமே. இரண்டு வருஷத்துக்கு முன்பு அண்ணா கச்சேரி கூட பிரமாதமாக நடந்ததே. இந்த வருஷங்கூட முதல் நாள் அண்ணாவின் கச்சேரியும், அடுத்த நாள் ஹரியின் கச்சேரியும் சேர்த்து ஏற்பாடு செய்யலாம் என்றுதான் வந்திருக்கிறேன்’ என்றார் வேலூர் வாசு.

அதற்குப் பாகவதர், நீங்கள் எல்லாரும் என்னிடம் வைத்திருக்கிற அன்புக்கும் அபிமானத்துக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் இனி எழுந்து பாடுவது என்பது அவ்வளவு சீக்கிரத்தில் இல்லை. நேற்று