பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தட்சணை 197

ஹரியின் பாட்டைக் கேட்டதும் எனக்கும் ஆசை வந்து விட்டது. உட்கார்ந்து அரைமணி தான் பாடியிருப்பேன். அதற்குள் தலை சுற்றலும் மயக்கமும் வந்துவிட்டன. மண்டை ஒட்டுக்குள் ஏதோ ரெயில் ஒடுகிறமாதிரி இரைச் சல். அதற்குப் பிறகு தோடியாவது பாடியாவது? ஆதலால் ஹரியின் கச்சேரி நடக்கிறபடி நடக்கட்டும். பிறகு தெய்வ சங்கல்பம்போல், போகப்போக பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்.

எல்லாருக்கும் அதுவே சரியென்று பட்டது.

பிறகு காரியதரிசி, அவர்கள், முன்பணம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஹரிக்கு என்ன கொடுக்க வேண்டு மென்று நீங்கள் கூறிவிட்டால் அதைக் கொடுத்து விட்டுப் போவார்கள். செளகரியமான தேதியையும் குறித்துக் கொண்டு விடலாம்’ என்றார்.

இதைக் கேட்டதும் பாகவதர் சிரித்தார். என்ன காரியதரிசி ஸ்ார், எல்லாப் பொறுப்பையும் என் தலையில் பேட்டால் எப்படி? இறக்கை முளைத்த பிறகு, அது அது தானே பறந்து கொள்ள வேண்டியதுதான். சிஷ்யனைத் தயார் செய்து விட வேண்டியதுதான் குருவின் பொறுப்பே தவிர, அதன் பிறகு லெளகிக விஷயங்களில் நான் தலை யிடமாட்டேன். அது அவ்வளவு உசிதமும் அல்ல. கச்சேரி செய்யப் போகிறவன் அவன். இனிமேல் அவனுடைய வாழ்க்கையைத் தன் யோக்கியதைக்குத் தகுந்த மாதிரி அமைத்துக் கொள்ள வேண்டியது அவனே. ஹரியையே கேளுங்கள்’ என்றார்.

ஹரியோ, தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்; குரு சொல்வதுபோல் செய்வதாகவும் சொல்லி விட்டான்.

“என்ன அண்ணா இது? நீங்கள் ஹரியை கேட்கச் சொல்கிறிர்கள். ஹரியோ, நீங்கள் போய்ப் பாடச்