பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 புல்லின் இதழ்கள்

சொன்னால் பாடுகிறேன், கொடுக்கச் சொன்னதைக் கொடுங்கள்: வாங்கிக் கொள்கிறேன்” என்கிறான். இப்படி இரண்டு பேருமே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? நானே உங்களை ஒன்று கேட்கிறேன்; கோபித் துக் கொள்ளாதீர்கள். பஜனை மடக் கச்சேரிக்கு உங்களை வந்து நான் கேட்டதும், நீங்கள் ஹரியைக் கேட்டுக் கொண்டா எங்களுக்குச் சொன்னிர்கள்? இப் போதும் அப்படியே, நீங்கள் தாம் ஒரு முடிவு சொல்ல வேண்டும். நீங்கள் என்ன கொடுக்கச் சொல்கிறிர்களோ அதைக் கொடுக்க என் நண்பர்கள் இருவரும் தயார். பளிச்சென்று சொல்லுங்கள் அண்ணா’ என்று விஷயத்தை முடித்து விட்டார் செயலாளர்.

‘கடைசியில் எல்லாருமாகச் சேர்ந்து என் தலை மேலேயே பொறுப்பைப் போட்டு விட்டீர்கள். சரி நான் ஒன்று சொல்லுகிறேன். ஹரியின் பாட்டை நாம் எல்லாரும் கேட்டோம். அவனை நீங்கள் இளம் வித்து வான்கள் செட்டில் சேர்க்கிறீர்களா பெரிய வித்து வான்கள் லிஸ்ட்டில் சேர்க்கிறிர்களா? வயதையும் அது பவத்தையும் பற்றி நான் கேட்கவில்லை. வித்தையைப் பற்றி; ஹரியின் திறமையைப் பற்றி மட்டும் பேசுகிறேன். என்ன நினைக்கிறீர்கள் என்றார்.

பாகவதருடைய இந்தக் கேள்வி, அவர்கள் எல் லாரையுமே திக்கு முக்காட வைத்தது. என்ன அண்ணா இது? உங்களுடைய சங்கீதப் பிடிகளை எல்லாம் போட்டு இப்படி எங்களை மடக்கினால் நாங்கள் என்ன பதில் பேசுவதென்றே தெரியவில்லை. ஹரியின் பாட்டைக் கேட்டுவிட்டுத்தான் இந்த ஏற்பாடு பண்ணினோம். கேட்டவர்கள் அத்தனைப் பேருக்குமே ஹரியினுடைய பாட்டுக் கச்சேரி ரொம்பப் பிடித்திருக்கறது. எல்லா ருக்குமே நல்ல அபிப்பிராயந்தான் அடுத்த வாரம், ரசிக ரஞ்சனி’ பத்திரிகையிலே கூட ஹரியின் பாட்டைப் பற்றி