பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 புல்லின் இதழ்கள்

பூச்சி பரமசாது, என்று சொல்லுவாயே. சிறிது நேரத் துக்குள் என்ன போடு போட்டுவிட்டாள் பார்த்தாயா? இனிமேல் நான் எழுந்திருக்கவே மாட்டேன்; இப்படியே இங்கேயே விழுந்து கிடக்கப் போகிறேன் என்று இவளுக்கு நினைப்புப் போலிருக்கிறது. அப்படித்தானே?’ என்றார்.

“ அப்படி உங்களை யார் சொன்னார்கள்? இன்றே வேண்டுமானாலும் மேடையிலே போய் உட்கார்ந்து பாடி விட்டு வாருங்கள். எங்களையெல்லாம் வீணாகக் கூப்பிட வேண்டாம் என்றுதான் சொல்லுகிறேன். பாவம்! பாக வதரைப் பணத்துக்கு ஆசைப்பட்டு அனுப்பி விட்டார்கள் என்று நாளை எங்களை அல்லவா ஊர் உலகம் நொறுக்கும்?’

‘சரி சரி, போதும், விடு. இப்பொழுது நான் கச்சேரிக்குப் போகிற நிலையில்தான் இருக்கிறேன்! அது இருக்கட்டும், இந்தப் பணத்தை வீட்டுச் செலவுக்கு எடுத்துக்கொண்டு விடாதே. இதெல்லாம் ஹரியின் பணம். அவனைக் கரூரிலும் வேலூரிலும் கச்சேரிக்குப் பேசி முன்பணம் கொடுத்துவிட்டுப் போகத்தான் காரியதரிசி இங்கே வந்திருந்தார். பயலுக்கு அதிர்ஷ்டம் ஆரம்ப மாகிவிட்டது; என்ன சொல்லுகிறாய்?”

“ ஆகவேண்டியதுதானே? காலையில் ஆற்றுக்குக் குளிக்கப் போய்விட்டு வருவதற்குள் என்னை வழிமறித்துக் கொண்டு ஹரியைப் புகழாதவர் இல்லை. எந்தக். கொள்ளிக் கண்ணாவது பட்டு வைக்காமல் இருக்க வேண்டுமே என்றுதான் கவலைப்பட்டேன். வந்ததும் உழக்கு நிறைய உப்பும் மிளகாயும், முச்சந்தி மண்ணுமாக ஹரி தலையைச் சுற்றிப் போட்டேன். துளியாவது கமற வேண்டுமே!’ என்றாள் லட்சுமி.

ஆமாம் ஆமாம். என் கண்ணேபட்டிருக்கும். அவன் நேற்றுப் பாட்டா பாடினான்? தேவகானமாக அல்லவா